விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு.. 3 பேர் பலி.. அதிரும் அமெரிக்கா.. போலீஸ் விசாரணை தீவிரம்
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகிவிட்டனர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகிவிட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் கடந்த 21 ஆம் தேதி சீன புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

அப்போது 72 வயது முதியவர் ஒருவர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 9 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே பெவர்லி கிரெஸ்ட் என்ற இடம் உள்ளது. இங்கு ஒரு சொகுசு விடுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது சொகுசு விடுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இதில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபரை போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மாதத்தில் அதுவும் கலிபோர்னியாவில் நடந்த 6 ஆவது துப்பாக்கிச் சூடு இதுவாகும்.












Click it and Unblock the Notifications