அமெரிக்கா-ரஷ்யா அணுஆயுத போர் வெடித்தால்.. 'கடும் பஞ்சம், 500 கோடி பேர் பலியாகலாம்' ஆய்வாளர்கள் பகீர்
வாஷிங்டன்: அமெரிக்கா-ரஷ்யா இடையே போர் ஏற்பட்டால், ''உலக நாடுகளில் கடும் பஞ்சம் ஏற்படும் என்றும், சுமார் 500 கோடி பேர் பலியாகலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் சீனா - தைவான் பிரச்சினை, ஒருபக்கம் வடகொரியாவின் அச்சுறுத்தல் என தொடர்ந்து உலக அரங்கில் போர் பதற்றம் நீடித்துக் கொண்டே உள்ளது.
அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல் சர்வதேச சமூகத்தினரை கவலை கொள்ளச்செய்துள்ளது.

அமெரிக்கா - ரஷ்யா போர் ஏற்பட்டால்...
ஒருபக்கம் பருவநிலை மாறுபாடு பிரச்சினை பூதகாரமாகி வரும் நிலையில், நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு மோதிக்கொள்ளும் சூழல் கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா - ரஷ்யா இடையே அணு ஆயுத போர் வெடித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.

மிக மோசமான சூழலாக இருக்கும்
இந்த ஆய்வின் படி, அமெரிக்கா - ரஷ்யா இடையேயான முழு வீச்சிலான அணு ஆயுத போர், இந்த உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான சூழலாக இருக்கும். மனித சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் மாண்டு போகக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அணு குண்டுகளால் ஏற்படும் புகை மண்டலங்கள் வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி சூரியக்கதிர்கள் ஊடுருவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், சர்வதேச அளவில் உணவு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். இதன் காரணமாக உலக நாடுகளில் கடும் பஞ்சம் ஏற்படும்.

பலனளிக்காது
சிறிய அளவிலான மோதல் கூட சர்வதேச உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அமெரிக்கா - ரஷ்யா இடையேயான போரால் உணவு தானிய உற்பத்தி மூன்று முதல் 4 ஆண்டுகளில் 90 சதவீதம் பாதிக்கும். இதனால், ஏற்படும் கடும் உணவு பஞ்சத்தை சமாளிக்க விலங்குகளுக்கு உணவாக அளிக்கப்படும் பயிர்கள் பயன்பாட்டை குறைப்பது, உணவு வீணடிப்பதை தடுப்பது உள்ளிட்டவற்றை செய்தால் கூட இது, பெரிய அளவிலான போரின் போது போதிய பலனளிக்காது" என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 கோடி பேர் பலியாகலாம்
மேலும் இத்தகையை பாதிப்பு ஏற்பட்டால் உலகில் சுமார் 500 கோடி பேர் பலியாகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் மேலும் 'போரை விட பஞ்சத்தின் காரணமாகவே அதிக பலிகள் ஏற்படும்' என்றனர். அமெரிக்கா - ரஷ்யா இடையே முழு அளவிலான போர் வெடிக்கும் பட்சத்தில் வளிமண்டலத்திற்குள் எந்த அளவு புகைகள் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதை கணக்கிட்டு அதனை பருவநிலை முன்னறிவிப்பு மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டு மேற்கூறிய மதிப்பு கணக்கிடப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்துள்ளதால், அமெரிக்கா - ரஷ்யா இடயேயான மோதல் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

போர் நடக்காமல் தடுக்க வேண்டும்
கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ், அணு ஆயுத போர் வெடிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்து இருந்தார். மேற்கூறிய இந்த ஆய்வு முடிவுகளுக்குப் பிறகு ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த பேராசிரியர்கள் கூறியது என்னவென்றால், ''அணு ஆயுத போர் ஒருபோதும் நடந்து விடாமல் நாம் தடுக்க வேண்டும்" என்றார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications