அடப்பாவமே! பேன் பிரச்னையை சும்மா நினைச்சிடாதீங்க.. 9 வயது சிறுமி பலி.. என்ன நடந்தது! பரபர தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் 9 வயது சிறுமி வித்தியமான காரணத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேன்கள் பிரச்சினையை அனைவரும் ஒருகட்டத்தில் எதிர்கொண்டு இருப்போம். பேன்கள் சிக்கலைத் தீர்க்க ஒவ்வொருவரும் பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டி இருக்கும்.
சரியான முறையில் சிகிச்சை எடுத்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் பேண்கள் பிரச்சினை தீர்ந்துவிடும். இருப்பினும், சிலருக்குப் பேன்கள் பிரச்சினை என்பது தொடர்ந்து இருக்கும்.

பேன்கள்
அதை பெரும்பாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். பேன்கள் எந்த விதமான சீரியஸான பிரச்சினையைத் தராது என்பதால் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். அமெரிக்காவில் இதேபோல பேன்கள் பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி சிறுமியின் தாயும் பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் 64 வயதான எலிசபெத் கிரேகோவிச். இவருக்கு 38 வயதில் சாண்ட்ரா கிரேகோவிச் என்ற மகளும் 9 வயதில் பேத்தி ஒருவரும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர்கள் வீட்டில் இருந்து அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த மருத்துவ குழுவினர் சிறுமி ஒருவரைக் கண்டுபிடித்தனர்.

என்ன காரணம்
மருத்துவ குழுவினர் அந்த சிறுமியைப் பரிசோதனை செய்த போது, அவரிடம் இருந்து எவ்வித ரிஆக்ஷனும் இல்லை. அச்சிறுமிக்கு முதலுதவி அளித்த போதும், அது பலன் அளிக்காமல் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது முகத்தில் அதிகளவில் புழுக்கள் இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். மருத்துவ குழுவினர் ஆய்வு செய்த போது தான், அது புழுக்கள் இல்லை அவரது தலையில் உள்ள பேண்கள் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

போலீஸ்
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதில் தன் மகளின் நிலை குறித்து தாயார் சாண்ட்ரா கிரேகோவிச்சுக்கு தெரியும் என்றே போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாகக் கடந்த மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் அவர் தனது காதலருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். அவள் (9 வயது சிறுமி) உடல்நிலை மோசமாக உள்ளதால் பார்த்துக் கொள்ளும்படி தாயார் தெரிவித்துள்ளார்.

கைது
சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அப்பெண்ணின் காதலன் கூறிய போதிலும் அவர் அதனைச் செய்யவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். பேன்கள் பாதிப்பு எந்தளவு மோசமாக இருந்தது என்பதை அவரது பாட்டி எலிசபெத் கிரேகோவிச்சும் தெரிந்தே வைத்துள்ளார். அவசர உதவி எண்ணுக்குக் காலும் கூட செய்யவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

நடந்தது என்ன
அச்சிறுமிக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், தலையில் பேன் தொல்லையால் ஏற்பட்ட ரத்த சோகையால் சிறுமி இறந்தது கண்டறியப்பட்டது. ஊட்டச் சத்துக் குறைபாடும் உயிரிழப்பிற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. பெற்றோரின் அலட்சியமாக உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரு குழந்தைகளும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கோயம்பேட்டில் கொல்லப்பட்ட டான்சர்.. இப்ப தோழியும் மரணம்.. சென்னை பாரில் எப்படி 17 வயது சிறுமி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications