வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பல்பை கண்டுபிடிச்சது தாமஸ் ஆல்வா எடிசன் கிடையாது.. ஒரு கருப்பர்.. சர்ச்சையில் ஜோ பிடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: குண்டு பல்பை கண்டுபிடித்தவர் ஒரு கருப்பினத்தவர் என்றும் வெள்ளையினத்தை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் அல்ல என்றும் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தற்போது தபால் ஓட்டுகள் அமெரிக்காவில் தொடங்கியுள்ளன. அது போல் இரு தரப்பினரின் பிரசாரங்களும் கொரோனாவுக்கு மத்தியில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

இதுதான் நாம்... வடக்கு சிக்கிமில் வழிதவறி விழிபிதுங்கிய சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள்! இதுதான் நாம்... வடக்கு சிக்கிமில் வழிதவறி விழிபிதுங்கிய சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள்!

கண்டனம்

கண்டனம்

இந்த நிலையில் ஜோ பிடன் தனது பிரசாரத்தில் பேசிய கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதாவது குண்டு பல்ப்பை கண்டுபிடித்தவர் லூயிஸ் லாடிமர் என்ற கருப்பினத்தவர்தான். தாமஸ் ஆல்வா எடிசன் எனும் வெள்ளையினத்தவர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

பல்புகள்

பல்புகள்

ஜோ பிடன் குறிப்பிடும் லாடிமர் பல்புகள் நீண்ட நேரம் எரிய வைக்கும் இழையை கண்டுபிடித்தார் என நெட்டிசன்கள் விளக்கமளித்துள்ளார்கள். அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவர் காவல் துறையினரால் கொல்லப்பட்டார். இதை கண்டித்து கருப்பின மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

டிரம்ப் மீது கோபம்

டிரம்ப் மீது கோபம்

போராட்டம் நடத்தினால் சுட்டு பொசுக்கிவிடுவேன் என கூறியிருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்கர்கள் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்த மக்களின் கோபத்தை தனக்கு வாக்காக மாற்றும் முயற்சியில் பல்பை கண்டுபிடித்தது கருப்பினத்தவர் என ஜோ பிடன் பேசியதாக கூறப்படுகிறது.

ஆதரவு

ஆதரவு

என்னதான் கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது என்பது ஜோ பிடனின் கொள்கையாக இருந்தாலும் அதற்காக வரலாற்றை எப்படி மாற்றலாம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இவர் இப்படி என்றால் டிரம்போ, இந்தியர்களுக்கு எதிராக விசா உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டு இந்திய பிரதமர் மோடியை பாராட்டி பேசினால் இந்தியர்களின் வாக்குகள் கிடைக்கும் என பகல் கனவு காண்கிறார். என்ன நடக்குமோ! தேர்தலின்போதுதான் தெரியும்!

English summary
A black man invented the light bulb, not the white man Edison, claims US Presidential candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X