வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தைவானில் நிலநடுக்கம்: 'பொம்மை போல் குதித்த ரயில்'.. பரவும் வீடியோ.. அதிர்ந்து போன பயணிகள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தைவான் நாட்டில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அங்குள்ள ஒரு ரயில் நிலையத்தில் நிற்கும் ரயில் ஒன்று பொம்மை போல் குழுங்குகின்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

தைவான் கிழக்கு கடற்கரையில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் நாட்டின் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. மக்களும் பதற்றமடைந்தனர்.

அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் நேற்று 6.6 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பெரும்பாலான கட்டிடங்கள் குலுங்கினர்.

பாஜக ஸ்கெட்ச் எம்.எல்.ஏவுக்கு இல்ல.. அமைச்சருக்காம்.. 'இதான் சங்கதி’- புட்டுப்புட்டு வைக்கும் திமுக! பாஜக ஸ்கெட்ச் எம்.எல்.ஏவுக்கு இல்ல.. அமைச்சருக்காம்.. 'இதான் சங்கதி’- புட்டுப்புட்டு வைக்கும் திமுக!

தைவானில் நிலநடுக்கம்

தைவானில் நிலநடுக்கம்

அமெரிக்க புவியியல் மையம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சுமார் 6.6 ஆக பதிவானது என்றும் உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் நிலநடுக்க ஏற்பட்டதாகவும், டைடுங்கி நகரத்துகு வடக்கு பகுதியில் 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவித்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

மீண்டும் நிலநடுக்கம்

மீண்டும் நிலநடுக்கம்

இந்த நிலையில், தைவானில் குறிப்பிட்ட சில இடங்களில் இன்று மதிய நேரத்திலும் திடீரென கட்டிடங்கள் குலுங்குவது போல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு வந்தனர். அப்போது பல கட்டிடங்கள் அப்பட்டமாக குலுங்கியதை மக்கள் பார்த்ததாக கூறினர். இது தொடர்பாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவிக்கையில், ''தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கு பகுதியில் 85 கிமீ தொலைவில் மதியம் சுமார் 2 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்தது.

பொம்மை போல் குலுங்கும் ரயில்

பொம்மை போல் குலுங்கும் ரயில்

சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், சாலைகள் பாலங்கள் சேதமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. இந்த நிலையில் தைவான் நாட்டில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் ஒன்று பொம்மை போல் குலுங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. நிலநடுக்கம் ஏற்படும் சமயத்தில் ரயிலுக்காக காத்து நிற்கும் பயணிகளில் சிலர் இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

பரவும் வீடியோ

பரவும் வீடியோ

அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட நபர், பார்த்தீங்களா இந்த ரயில் எப்படி குலுங்குகிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று நிற்கிறது. அந்த ரயிலில் பயணிகள் இருந்தது போல் தெரியவில்லை. ஆனால் பிளாட்பாரத்தில் பயணிகள் பலரும் ஓரமாக தரையை ஒட்டி அமர்ந்துகொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்துகொண்டும், நிலநடுக்கத்தில் ரயில் பொம்மை போல் குலுங்குவதையும் பயத்தோடு பார்த்துகொண்டு இருப்பது போல் வீடியோவில் உள்ளது.

இதே மாதம்

இதே மாதம்

நிலநடுக்கத்தில் ரயில் பொம்மை போல் ஆடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரயிலையே குலுங்க வைத்த இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இரு டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் பகுதியில் தைவான் நாடு இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் தான். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 1999-ஆம் ஆண்டு ஏற்பட்டதைவிட குறைவு தான். கடந்த 1999-ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்து 400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Due to the earthquake that struck Taiwan this afternoon, a video of a train standing at a railway station collapsing like a toy is currently going viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X