'நான் அவன் இல்லை' பாணியில் ஏமாற்றும் சீரியல் டேட்டர்! ஒட்டுமொத்த நியூயார்க் பெண்கள் தேடும் ஒற்றை ஆண்
வாஷிங்டன்: நியூயார்க் நகரை சேர்ந்த ஆண் ஒருவரை அங்குள்ள ஒட்டுமொத்த பெண்களும் வலைவிரித்து தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒருவர் பல்வேறு பெண்களுடன் டேட்டிங் செய்துவிட்டு திடீரென மாயமாகிவிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக டிக்டாக்கில் வெளியான வீடியோ ஒன்று திடீரென டிரெண்டிங் ஆனது. மேலும், யார் பல்வேறு பெண்கள் தேடும் அந்த ஒற்றை நபர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டிக்டாக்
கடந்த செவ்வாய்க்கிழமை நியூயார்க் நகரில் வசித்து வரும் மிமி ஷோ என்பவர் தனது டிக்டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தான் வெஸ்ட் எல்ம் காலேப் என்பவரை டேட்டிங் செய்ததாகவும் இருப்பினும் எல்ம் காலேப் திடீரென தொடர்பைத் துண்டித்துவிட்டதாகவும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்று குறிப்பிட்டார். இந்த டிக்டாக் வீடியோ தான் அனைத்தையும் தொடங்கி வைத்தது என்றே கூறலாம்.

பெண்கள்
உடனடியாக பல்வேறு பெண்களும் வெஸ்ட் எல்ம் காலேப் என்பவரால் தாங்களும் டேட்டிங் செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்தார், ஆனால், உண்மையில் டிக்டாக்கில் மிமி ஷோ தெரிவித்த நபரும் மற்ற அனைத்து பெண்கள் குறிப்பிட்ட நபரும் வேறு வேறு இளைஞர்கள். இருப்பினும், பல்வேறு பெண்களும் தாங்கள் ஒரே இளைஞரால் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து மிமி ஷோ, யார் அந்த வெஸ்ட் எல்ம் காலேப் எனத் தேட தொடங்கியுள்ளார்.

ஒரே முறை
அப்போது தான் அவருக்குப் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. வெஸ்ட் எல்ம் காலேப்பால் ஏமாற்றப்பட்ட பல பெண்களுடன் அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அதில் அத்தனை பேரும் சொல்வது ஒன்றாகவே இருந்துள்ளது. அதாவது ஹிங்கில் என்ற டேட்டிங் செயலி மூலம் தான் எல்ம் காலேப்பால் இந்த பெண்களைத் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னர் ஒரு சில டேட்களுக்கு பின்னர் அந்த பெண்களை ஏமாற்றியுள்ளார். இதைக் கண்டுபிடித்த மிமி ஷோ பெண்கள் மேலும் அவரிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என எச்சரித்து வீடியோ வெளியிட்டார்.

சீரியல் டேட்டர்
அப்போது மற்றொரு பெண்ணும் தான் இப்போது வெஸ்ட் எல்ம் காலேப்பை தான் டேட் செய்து வருவதாகவும் தன்னை எச்சரித்ததற்கு நன்றி என தெரிவித்தார். அதேபோல வேறு சில பெண்களும் தாங்கள் இப்போது வெஸ்ட் எல்ம் காலேப்பை தான் டேட் செய்து வருவதாகத் தெரிவித்தனர். இப்படி ஒரே நேரத்தில் தொடர்ந்து பல்வேறு பெண்களை டேட் செய்யும் இந்த நபரை சீரியல் கில்லரை போல சீரியல் டேட்டர் (serial dater) என்று சிலர் சாடியுள்ளனர்.

யார் அவர்
மேலும் பல்வேறு பெண்களும் தாங்கள் எல்ம் காலேப்பால் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்பது குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து அங்கு #WestElmCaleb என்ற ஹெஷ்டேக் டிரெண்டாக தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஊடக நிறுவனங்களும் எல்ம் காலேப்பை தொடர்பு கொண்டுள்ளது. இருப்பினும், அவர் இதுவரை யாருக்கும் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications