‛‛26 தலைவர்கள்’’ கொத்தாக தூக்கிய பாஜக.. இமாச்சலில் நாளை மறுநாள் தேர்தல்.. காங்கிரசுக்கு பெரிய ஷாக்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 26 காங்கிரஸ் தலைவர்களை ஒரே நேரத்தில் காங்கிரஸில் இருந்து பாஜக கொத்தாக தூக்கியது. இதனால் காங்கிரஸ் கட்சி ஷாக் அடைந்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது.

இன்று பிரசாரம் ஓய்கிறது
கடந்த ஒரு மாதமாக தீவிரமாக தேர்தல் பிரசாரம் நடந்தது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரசும் முயன்று வருகிறது. டெல்லி, பஞ்சாப்பை போல் புதிதாக ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மியும் களத்தில் குதித்துள்ளது. நாளை மறுநாள் தேர்தல் என்பதால் இன்றுடன் பகிரங்க பிரசாரம் ஓய்கிறது.

மாறி மாறி ஆட்சி
இமாச்சல பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் அங்குள்ள வாக்காளர்கள் கடந்த 1985ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் காங்கிரஸ், பாஜக கட்சிகள் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. அதாவது இமாச்சல பிரதேசத்தில் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து ஆட்சி அமைத்தது இல்லை. ஒருமுறை காங்கிரஸ், மற்றொரு முறை பாஜக என மாற்றி மாற்றியே வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்கின்றனர். இந்த வரலாறு இந்த தேர்தலிலும் தொடருமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கொத்தாக தூக்கிய பாஜக
இருப்பினும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் சொந்த மாநிலம் இமாச்சல பிரதேசம் என்பதால் அவர் அதற்கான பணிகளை செய்துள்ளார். இந்நிலையில் தான் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் திரளாக பாஜகவில் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 26 காங்கிரஸ் கட்சியினர் ஆளும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

காங்கிரஸ் ஷாக்
அதன்படி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தரரம்பால் தாகூர், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சைனி, முன்னாள் கவுன்சிலர் ராஜன் தாகூர், மாவட்ட முன்னாள் துணை தலைவர் அமித் மேத்தா, மெஹர் சிங் கன்வார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் நேகி, ஜெய் மா சக்தி உள்பட பலர் அடங்குவர். இவர்கள் அனைவரும் பாஜகவின் முதல்வர் ஜெய்ராம் தாகூர், பாஜக தேர்தல் பொறுப்பாளர் சுதன் சிங் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்காகவும், பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications