வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலெக்ஸி நவல்னி விஷ விவகாரம்: ரஷ்யா மீது முதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

ரஷ்ய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா நேற்று பொருளாதார தடைகளை விதித்தது,

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நவால்னி விவகாரத்தில் ரஷ்ய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா நேற்று பொருளாதார தடைகளை விதித்தது. பேரழிவு ஆயுதங்கள் பயன்பாடு தடைச் சட்டம் 2005 மற்றும் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் கட்டுப்பாடு மற்றும் போர் ஒழிப்பு சட்டம் 1991 ஆகியவற்றின் கீழ் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர் அலெக்ஸி நவல்னி. தீவிர புடின் எதிர்ப்பாளராக அறியப்படும் இவர், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சைபீரியாவிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

முதலில் அவருக்கு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காகத் தனி விமானம் மூலம் அவர் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார்.

 கடலில் நீச்சலடிப்பதும்... மாணவர்களுடன் தண்டால் எடுப்பதும் தலைவருக்கு அழகல்ல - குஷ்பு கிண்டல் கடலில் நீச்சலடிப்பதும்... மாணவர்களுடன் தண்டால் எடுப்பதும் தலைவருக்கு அழகல்ல - குஷ்பு கிண்டல்

நவல்னிக்கு பாதிப்பு

நவல்னிக்கு பாதிப்பு

கடந்த ஆறு மாதங்களாக ஜெர்மனியிலேயே அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இடையில் அவரது உடல்நிலை கோமா நிலைக்கும் சென்றது. தொடர் தீவிர சிகிச்சைக்குப் பின், அவரது உடல்நிலை மெல்ல முன்னேறியது. நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு வகை ரசாயன விஷம் நவல்னிக்கு அளிக்கப்பட்டதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். ஆனால், இத்தகவலை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது.

புடின் மீது நவல்னி புகார்

புடின் மீது நவல்னி புகார்

ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பிய நவல்னி, தன்னை கொல்ல முயன்றவர் புடின் என்று குற்றஞ்சாட்டினார். தான் ரஷ்யா திரும்புவதைத் தடுக்க புடின் பல்வேறு முயற்சிகளை எடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். ரஷ்யாவில் காலடி வைத்த சிறிது நேரத்தில், ரஷ்ய காவல் துறையினர் நவல்னியை கைது செய்தனர்.

ஜோ பைடன் பேச்சு

ஜோ பைடன் பேச்சு

இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.‌‌ அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், எதிர்க்கட்சித்தலைவர் நவால்னி மீதான நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.‌

ரஷ்யா மீது பொருளாதார தடை

ரஷ்யா மீது பொருளாதார தடை

இந்தநிலையில் நவால்னி விவகாரத்தில் ரஷ்ய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா நேற்று பொருளாதார தடைகளை விதித்தது, பேரழிவு ஆயுதங்கள் பயன்பாடு தடைச் சட்டம் 2005 மற்றும் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் கட்டுப்பாடு மற்றும் போர் ஒழிப்பு சட்டம் 1991 ஆகியவற்றின் கீழ் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோ பைடன் நிர்வாகம் ரஷ்யா மீது விதித்துள்ள முதல் பொருளாதாரத்தடையாகும்.

English summary
The US on Tuesday announced sanctions on senior Russian government officials and Russian entities in response to what U.S. officials said was Moscow's attempt to kill opposition leader Alexei Navalny with a nerve agent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X