முதல் முறை.. ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக ஓட்டளித்த இந்தியா! உக்ரைன் போர் விவகாரத்தில் என்னாச்சு?
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் கடந்த நிலையில் முதல் முறையாக ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா ஓட்டளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. ஒரு காலத்தில் உக்ரைன் என்பது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனாக இருந்தது. இந்நிலையில் தான் தற்போது தனித்தனி நாடுகளாக ரஷ்யா, உக்ரைன் உள்ளன.
இந்நிலையில் தான் எல்லை தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா-உக்ரைன் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை துவங்கியது.

ரஷ்யா மீது பொருளாதார தடைகள்
இதனை அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. போர் நடவடிக்கையை கைவிடும்படி அந்நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதனை கேட்கவில்லை. இதையடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும் ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற அந்த நாடுகள் முயன்று வருகின்றன.

நடுநிலை வகிக்கும் இந்தியா
இருப்பினும் இந்தியா தொடர்ந்து நடுநிலை வகித்து வருகிறது. போர் நடவடிக்கையை கைவிட்டு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை இந்தியா விதிக்கவில்லை. அதோடு தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தக ரீதியாக இந்தியா தொடர்பில் உள்ளது. அதோடு ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பை இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதன்மூலம் ஐநா சபையிலும் ரஷ்யாவுக்கு இந்தியா சப்போர்ட்டாக உள்ளது.

இந்தியா ஓட்டளிப்பு
இந்நிலையில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் முதல் முறையாக ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா ஓட்டளித்துள்ளது. அதாவது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி வாயிலாக உரையாற்ற அழைப்பு விடுக்கும் விஷயத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தது. இந்த கவுன்சிலில் வரும் டிசம்பர் மாதம் வரை 2 ஆண்டுகளாக இந்தியா தற்காலிக உறுப்பினராக அங்கம் வகிக்கும் நிலையில் இன்று ரஷ்யாவுக்கு எதிராக ஓட்டளிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினராக உள்ள நிலையில் இன்று ரஷ்யாவுக்கு எதிராக 13 நாடுகள் ஓட்டளித்தன. இந்த ஓட்டெடுப்பின்போது ரஷ்யா எதிராக வாக்களித்த நிலையில் சீனா புறக்கணித்தது.

ரஷ்யாவுக்கு எதிரானது அல்ல
இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "எனது பார்வையில் நாங்கள் ரஷ்யாவுக்கு எதிராக ஓட்டளிக்கவில்லை. விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றுவதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. அதற்கு நாங்கள் ஆதரவு மட்டுமே அளித்தோம். விளாடிமிர் ஜெலன்ஸ்கி 3-வது முறையாக ஐநாவில் பேச உள்ளார் என்று நினைக்கிறேன். ஏற்கனவே இருமுறை இதுபோல அவர் உரையாற்றி இருக்கிறார்'' என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications