வாவ்! என்ன வாகனம்.. நின்ற இடத்தில் இருந்து அப்படியே பறந்த நபர்.. வியந்து பதிவிட்ட ஆனந்த் மகிந்திரா

மீட்பு பணிகளுக்கு பெரிதும் பயன்படக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டு வரும் புதுமையான ஜெட்சூட் பயண கருவி குறித்த வீடியோவை தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மீட்பு பணிகளுக்கு பெரிதும் பயன்படக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டு வரும் புதுமையான ஜெட்சூட் பயண கருவி குறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார். இந்த புதுமையான ஜெட் சூட் பற்றி நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர். அவரது ட்விட் பதிவுகள் பெரும்பாம்பாலும் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

ஆனந்த மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஈடுபாடு காட்டுபவர். தனக்கு பிடித்தமான துணுக்குகள், தன்னம்பிக்கை ஊட்டும் வீடியோக்கள், எளிய பின்னணியில் இருந்து சாதிக்கும் நபர்கள் குறித்த பல்வேறு வகையான பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பகிந்து வருகிறார்.

ஜெட்சூட் பயண கருவி

ஜெட்சூட் பயண கருவி

ஆனந்த் மகிந்திராவிற்கு ட்விட்டரில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லும் அளவுக்கு அவரது பதிவுகளுக்கு லைக்குகள் அள்ளும். ஆனந்த் மகிந்திராவை ட்விட்டரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சுமார் ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், ஜெட் சூட் என்று அழைக்கப்படும் பயண கருவியை உடை போல ஒருவர் அணிந்து இருக்கிறார். இந்த கருவி இயங்கத்தொடங்கியதும் அந்த நபர் அப்படியே பறக்கத்தொடங்குகிறார்.

சக்திமான் போல பறந்த நபர்

சக்திமான் போல பறந்த நபர்

உதாரணத்திற்கு சக்திமான் போல நின்ற இடத்தில் இருந்து அப்படியே கருவியின் உதவியால் பறந்த படி அவர் செல்லும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மலைப்பாங்கான பகுதியில் ஜெட் சூட் அணிந்து இருக்கும் நபர் பயணம் செய்கிறார். சூட் பகுதியில் என்ஜினும் அதனை இயக்குவதற்கான கன்ட்ரோல் கைகளிலும் உள்ளது. அவசர தேவைகளுக்கு பயன்படும் வகையில் இதுபோன்ற பயண கருவி தயாரிக்கும் முயற்சியில் இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக ட்விட்டரில் வீடியோவை முதலில் பகிர்ந்தவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

புதுமையான இயந்திரம் இதுவாகும்

புதுமையான இயந்திரம் இதுவாகும்

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வியந்து பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா அதில் கூறியிருப்பதாவது:- மற்றுமொரு புதுமையான இயந்திரம் இதுவாகும். பெரிய அளவில் மக்கள் பயன்படுத்தகூடிய பயண கருவியாக இது மாறாது. ஆனாலும் முக்கிய பயன்பாடுகளுக்கு வலுவாக உதவும். மீட்பு பணிகளின் போது இந்த ஜெட் சூட் பயன்படுத்த முடியும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த கருவியை பயன்படுத்துவதை பார்க்க விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ராணுவத்தில் பயன்படுத்தலாம்

ராணுவத்தில் பயன்படுத்தலாம்

ஆனந்த் மகிந்திராவின் இந்த ட்விட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த புது விதமான பயண கருவி, தொலைதூர மலைப்பாங்கான இடங்களில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கு இதனை பயன்படுத்தலாம். இது பெரும் லைஃப் சேவிங் பயண சாதனமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறுகையில், ''இந்த கருவியை இந்திய ராணுவம் கார்கில், லே, லடாக் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு பயன்படுத்தலாம்'' என்று பதிவிட்டுள்ளார். எளிதில் செல்ல முடியாத குறுகலான பாதைகள் மற்றும் வெள்ள பாதிப்பு, உயரமான கட்டிடங்களில் கூட மீட்பு பணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இந்த கருவி இருக்கும் எனவும் நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+