தடுப்பூசியால் கர்ப்பமாவது குறைகிறதா? கொரோனாவால் ஆண்களுக்கு வரும் “அந்த” பிரச்சினை- நிபுணர் விளக்கம்
வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசியால் பெண்கள் கர்ப்பம் தரிப்பது குறைகிறதா என்பது குறித்து அமெரிக்க தொற்றுநோய்கள் துறை நிபுணரான ஆண்டனி பாசி விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனாவை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் உலகநாடுகள் பலவற்றில் தனது கோர தாண்டவத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், பலி எண்ணிக்கை சற்று கவலையளிக்கும் விதமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பதற்காக தடுப்பூசி போடப்படும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது இந்தியாவில் கோவாக்சின், கோவி சில்டு உள்ளிட்ட தடுப்பூசிகளும், ஃபைசர், ஸ்புட்னிக் V, உள்ளிட்ட வெளிநாட்டு தயாரிப்பு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி வரும் நிலையில் இதுவரை 160 கோடி மக்களுக்கும் மேல் இந்தியாவில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

தடுப்பூசியால் பக்க விளைவுகள் ?
கொரோனாவை தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி செயல்படும் எனவும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் 168 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், 71% பேருக்கு முழுமையாகவும் , 52% மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 418 கோடி மக்களுக்கும் உலக மக்கள் தொகையில் 53.6 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசியால் மக்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக வதந்திகள் உலாவுகின்றன.

பரவும் வதந்திகள்
கொரோனா தடுப்பு ஊசி காரணமாக திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர் எனவும், பெண்கள் கருத்தரிக்கும் கர்ப்பகாலத்தில் தடுப்பூசி போடலாமா என்கிற குழப்பங்களும் அதிக அளவில் உலாவுகிறது. ஆண்கள் பெண்களை கருத்தரிக்க செய்யும் ஆற்றலை கொரோனா தடுப்பு ஊசி குறைகிறது என்றும் ஒரு நாள் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்கள் கருத்தரிப்பது குறைந்து வருவதாகவும் சமூக வலைதளங்களிலும் நேரடியாகவும் வெளியாகி வருகிறது. இதுவரை இதற்கான ஆதார பூர்வ குற்றச்சாட்டுகள் பதிவு நிலையில் மருத்துவ நிபுணர்கள் மேற்கண்ட வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி வருகின்றனர்.

நிபுணர் விளக்கம்
இந்த நிலையில் தடுப்பூசி குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனில் உயர் மருத்துவ ஆலோசகரும் , அமெரிக்க புற்றுநோயியல் நிபுணருமான ஆண்டனி பாசி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர், தடுப்பூசி கர்ப்பம் தரிப்பதை குறைகிறது என்பது தவறான தகவல் என கூறினார் கருவுறுதலை எதிர்மறையாக தடுப்பூசி பாதிக்காது என்பதை தற்போது வெளிவந்துள்ள தகவல்களும் முந்தைய ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன என்றார்.

ஆண்களுக்கு பிரச்சினை
கர்ப்பம் தரிப்பதை தடுப்பூசிகள் குறைக்கும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை இல்லை எனவும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றல் சற்றே குறைகிறது எனவும் இது தற்காலிக பிரச்சினை என்றார். அதுவும் கொரோனா வைரஸ் உடன் தொடர்பு உடையது எனவும் தடுப்பூசியுடன் அல்ல எனவும் ஆண்டனி பாசி விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications