பென்டகன் தலைவராக... கறுப்பினத்தை சேர்ந்தவர் நியமனம்... ஜோ பிடன் அதிரடி முடிவு!
வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்பு தலைவராக கறுப்பினத்தை சேர்ந்த லாயிட் ஆஸ்ட்டினை நியமிக்க ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாக அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இந்த பதவியில் லாயிட் ஆஸ்டின் அமர்ந்தால் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெறுவார். தனது தலைமையில் இடம்பெறும் மந்திரி சபையை ஜோ பிடன் அறிவித்து வருகிறார்.

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியை தழுவினார். வருகிற ஜனவரி 20-ம் தேதி ஜோ பிடன் அதிபராகவும், இந்திய வம்சாவளி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவியேற்க உள்ளனர்.
தனது மந்திரி சபையில் இடம்பெறும் நபர்களை ஜோ பிடன் அறிவித்து வருகிறார். இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஜெனரல் லாயிட் ஆஸ்டின்(67) என்பவரை அமெரிக்கா பாதுகாப்பு தலைமையகம்(பென்டகன்) தலைவராக ஜோ பிடன் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கறுப்பினத்தை சேர்ந்த லாயிட் ஆஸ்டின் பென்டகன் தலைவராக நியமிக்கப்பட்டால் அந்த பதவியை அலங்கரிக்கும் முதல் ஆபிரிக்க-அமெரிக்கர் என்கிற பெருமையை லாயிட் ஆஸ்டின் பெறுவார்.2003 ல் அமெரிக்க படைகளை பாக்தாத்துக்கு வழிநடத்தி, அமெரிக்க மத்திய படைக்கு தலைமை தாங்கியவர் லாயிட் ஆஸ்டின் ஆவார்.
லாயிட் ஆஸ்டின் நான்கு தசாப்தங்களாக தனது பணியை ராணுவத்தில் கழித்தார். முன்னணி படைப்பிரிவுகள் முதல் தளவாடக் குழுக்களை இயக்குவது, ராணுவத்தில் ஆட்சேர்ப்பை மேற்பார்வையிடுவது, பென்டகன் தொடர்பான பல முக்கிய பணிகளைப் செய்தவர் லாயிட் ஆஸ்டின். லாயிட் ஆஸ்ட்டினை பதவியில் அமர்த்த ஜோ பிடன் திங்கள்கிழமை தனது விருப்பத்தை தெரிவித்ததாகவும், வெள்ளிக்கிழமை இது உறுதிபடுத்தப்படும் எனவும் சி.என்.என், பாலிடிகோ மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. லாயிட் ஆஸ்டின் நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பாதுகாப்பு தலைவராக கறுப்பினத்தை சேர்ந்த லாயிட் ஆஸ்ட்டினை நியமிக்க ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இந்த பதவியில் அமர்ந்தால் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்ற பெருமையை பெறுவார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications