ரிஷி சுனக் பெயரை 'ரஷீத் சனூக்' என்று உச்சரித்த ஜோ பைடன்.. கலாய்த்து மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்!
வாஷிங்டன்: இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் பெயரை தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தவறாக உச்சரித்தார். தற்போது இதை வைத்து சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது ஜோ பைடன், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

தவறாக உச்சரித்த ஜோ பைடன்
அப்போது ரிஷி சுனக்கின் பெயரை "ரஷீத் சனூக்" என்று தவறாக உச்சரித்துவிட்டார். அவர் கூறுகையில், 'ரஷீத் சனூக் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்' என்றார். அவர் அவ்வாறு பேசும் வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவ தொடங்கியது. இதில், தற்போது ஜோ பைடன் ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரிப்பதை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அரபு உடையில் ரஷீத் சுனூக்
இதேபோல் ஒரு நெட்டிசன் ரிஷி சுனக் அரபு நாட்டு பாரம்பரிய உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு இது தான் "ரஷீத் சனூக்" என்று பதிவிட்டுள்ளார்.

ரிஷி சுனக்கை போல
"ரிஷி சுனக்கை என்பவரை போல ரஷீத் சனூக் எப்படி இருக்கிறார் பாருங்கள்" என்று ரிஷி சுனக்கின் 2 புகைப்படங்களை கம்பேர் செய்து ஒருவர் மீம்ஸ் பதிவிட்டுள்ளார். இதில் ஒரு படத்தில் ரிஷி சுனக் கண்ணாடி அணிந்தவாறும் மற்றொரு படத்தில் கண்ணாடி அணியாமலும் இருக்கிறார்.

இது தான் மிகப்பெரிய சாதனை
ரஷீத் சனூக் இங்கிலாந்தின் பிரதமர் ஆனது மிகப்பெரிய சாதனை என்று ஜோ பைடன் சொல்கிறார். ஆனால் உண்மையில் அவரது பெயரை கற்றுக்கொள்வதை பற்றி கவலைப்படாததுதான் மிகப்பெரிய சாதனை" என்று ட்விட்டரில் ஒருவர் கேலியாக பதிவிட்டுள்ளார்.

ரஷீத் சனூக்கை பாருங்கள்
ரஷீத் சனூக்கை பாருங்கள் என்று பதிவிட்டு ஜோ பைடனின் கண்ணில் இருந்து வெளிச்சம் வருவது போன்ற புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

எனது பெயரை சொல்லுங்க
எனது பெயரை சொல்லுங்க.. எனது பெயரை சொல்லுங்க.. என்று ஜோ பைடனை பார்த்து ரிஷி சுனக் கேட்கும்படி ஒரு படத்தின் வீடியோவை கட் செய்து நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் ஜோ பைடனை கேலி செய்து மீம்ஸ் மற்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications