Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவைபோல் அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி.. கமலா ஹாரீஸ், டொனால்ட் ட்ரம்ப் உற்சாக கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியாவை போல் அமெரிக்காவில் பல இடங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தங்கள் வீடுகளில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடினர். அதேபோல் நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் ஜோபைடன், அதன்பிறகு அக்டோபர் 26ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் உள்ளிட்டவர்கள் கோலாகலமாக தீபாவளி கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆண்டுதோறும் இந்து பண்டிகையான தீபாவளி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

புத்தாடை வாங்கி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட தயாராகி வருகின்றனர். நாளை மறுநாள் தீபாவளி என்பதால் முக்கிய பஜார்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

 உலக நாடுகளில் தீபாவளி

உலக நாடுகளில் தீபாவளி

தீபாவளி பண்டிகை இந்தியாவில் கொண்டாடுவது போலவே உலகின் பிற நாடுகளிலும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக நடக்கும். அந்த வகையில் பல நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளது. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சிறப்பாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் தீபாவளி

அமெரிக்காவில் தீபாவளி

அமெரிக்காவை பொறுத்தமட்டில் சுமார் 4 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்க வாழ் இந்தியர்களாக உள்ள இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை கொண்டாட தவறுவது இல்லை. குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி, பாஸ்டன், பிலடெல்பியா, டெட்ராய்ட், மியாமி, அட்லாண்டா, டல்லாஸ், சியாட்டில், பீனிக்ஸ், மினியாபோலிஸ், டென்வர், லாஸ் வேகாஸ், ஆர்லாண்டோ உள்ளிட்ட இடங்களில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வெள்ளை மாளிகை கொண்டாட்டம்

வெள்ளை மாளிகை கொண்டாட்டம்

நியூயார்க்கில் உள்ள ஹட்சன் நதியில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாடப்படும். வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டு வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படும். மேலும் பல கல்வி நிறுவனங்களில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையிலும் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு முதல் முதலாக 2002ல் தீபாவளி கொண்டாட துவங்கிய நிலையில் தற்போது வரை அது பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் பல மாகாணங்களில் தீபாவளிக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாட்டம்

டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாட்டம்

இந்த ஆண்டு இந்தியாவில் நாளை மறுநாள் தீபாவளி கொண்டாடும் நிலையில் அமெரிக்காவில் தற்போதே கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல மாகாணங்களின் தலைநகர், கவர்னர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் வாஷிங்டனில் அரசு சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடத்தப்பட உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15ம் தேதி முதல் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், செனட்டர் சக் சியூமர், இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது அடுத்த ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரீஸ்-டிரம்ப்

கமலா ஹாரீஸ்-டிரம்ப்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் தனது வீட்டில் நேற்று தீபாவளியை கொண்டாடினார். விளக்கு அலங்காரத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்பட ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். அதேபோல் புளோரிடாவில் உள்ள வீட்டில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று தீபாவளி கொண்டாடினார். இதில் 200க்கும் அதிகமான அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்கர்கள் பங்கேற்றனர்.

ஜோபைடன் கொண்டாட்டம்

ஜோபைடன் கொண்டாட்டம்

மேலும் அக்டோபர் 24ல் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோபைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட உள்ளார். மேலும் தீபாவளி விருந்து வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க இந்திய தூதரக அதிகாரிகள் உள்பட ஏராளமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 26-ந் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+