சிகப்பு பட்டனை அழுத்திய அதிபர் டிரம்ப்.. பதறும் வெள்ளை மாளிகை.! ஆனா கடைசியில் செம ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்வாகியுள்ள நிலையில், அவர் வெள்ளை மாளிகையில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார். அதன்படி திடீரென டிரம்ப் அலுவலகத்தில் ஒரு சிவப்பு கலர் பட்டன் வந்துள்ளது. இந்த சிவப்பு கலர் பட்டனுக்கு என்ன காரணம்! இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்காலம்.

டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் வந்துள்ளார். இதனால் அவர் தனக்கு ஏற்றார் போல வெள்ளை மாளிகையையும் அதிபர் பயன்படுத்தும் ஓவல் அலுவலகத்தையும் மாற்றி அமைத்துள்ளார்.

donald trump offbeat america

அதில் அவர் செய்த ஒரு மாற்றம் தான் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. ஓவல் அலுவலகத்திற்குள் வந்தவுடன் அவர் செய்த முதல் சில மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.

அதாவது அங்குள்ள அதிபரின் டேபிள் மீது ஒரு சின்ன மரப்பெட்டி போல ஒன்று இருக்கும். அதை ஓபன் செய்தால் உள்ளே ஒரு சிவப்பு பட்டன் இருக்கும்.. அதிபர் அலுவலகத்தில் சிவப்பு பட்டனா! அப்போ நிச்சயம் வெடிகுண்டு அல்லது அணுகுண்டுக்கான பட்டனாகவே அது இருக்கும் என நீங்கள் கருதலாம். டிரம்ப் அந்த பட்டனை அழுத்தினால் எதிரி நாடுகளின் மீது அணுகுண்டு பாயுமோ என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், உண்மையில் டிரம்ப் அந்த பட்டனை அழுத்தினால் அணுகுண்டு எல்லாம் வராது. மாறாக வெள்ளை மாளிகை ஊழியர் ஒருவர் ஓவல் அலுவலகத்தின் கதவை திறந்து டயட் கோக் பானத்தை கொடுப்பார். அதாவது இது டிரம்பிற்கு மிகவும் பிடித்த கோக் பட்டன். டிரம்பிற்கு எப்போதெல்லாம் கோக் குடிக்க வேண்டும் என்பது போல இருக்கிறதோ.. அப்போதெல்லாம் டிரம்ப் அந்த பட்டனை அழுத்துவார்.

உடனே வெள்ளை மாளிகையில் உள்ள பட்லர்களுக்கு ஓவல் அலுவலகத்திற்கு கோக் பானத்தை எடுத்துக் கொண்டு ஓடுவார்கள். அதுவும் சாதாரண கோக் இல்லை.. டயட் கோக் தான் டிரம்ப் குடிப்பார்.

டிரம்ப் இதற்கு முன்பு 2017- 2021 வரை அதிபராக இருந்த போது தான் இந்த கோக் பட்டன் முதலில் ஓவல் அலுவலகத்திற்குள் வந்தது. இருப்பினும், 2021ம் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு இதை அவர் நீக்கிவிட்டார். இந்தச் சூழலில் தான் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்தவுடன் கோக் பட்டனையும் மீண்டும் கொண்டு வந்துவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு டிரம்ப் இது தொடர்பாக கூறுகையில், "எனது ஆபீசுக்கு வருவோர் இது ஏதோ ஆபத்தான விஷயம் என நினைப்பார்கள். ஆனால், உண்மையில் இதை எழுத்தினால் கோக் தான் வரும். அதேநேரம் நான் இந்த பட்டனை அழுத்தும்போது இங்குள்ளவர்கள் பதறி தான் போவார்கள்" என்றார். டிரம்ப் ஒவ்வொரு நாளும் சராசரியாக 12 கேன்கள் டயட் கோக் குடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்த டயட் கோக் பட்டன் குறித்து முன்னாள் வெள்ளை மாளிகை உதவியாளர் கிறிஸ் சிம்ஸ் தனது "டீம் ஆஃப் வைப்பர்ஸ்" புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். அதாவது "முதல்முறை அலுவலக்திற்கு வருவோரை டிரம்ப் இதை வைத்து ஏமாற்றுவார். அவர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது திடீரென இந்த சிவப்பு நிற பட்டனை அழுத்திவிடுவார். அவரை பார்க்க வந்தவர்கள் உடனே மிரண்டு போய் என்ன செய்வதென்றே புரியாமல் மிரள்வார்கள். ஆனால், சில நொடிகளில் ஒருவர் டயட் கோக் எடுத்து வருவார். இதை வைத்து டிரம்ப் எல்லாரையும் ஏமாற்றுவார்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+