வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புது சர்ச்சை.. வெள்ளை இன சிறுவனின் இனவெறி.. 2 உசுரு போச்சு.. அவனுக்கு வக்காலத்து வாங்கும் டிரம்ப்

17 வயது சிறுவனுக்கு அதிபர் டிரம்ப் சப்போர்ட் செய்து பேசி உள்ளார்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: "போராட்டக்காரர்களிடமிருந்து 17 வயது சிறுவன் விலகி செல்ல முயற்சித்தார். ஆனால் போராட்டக்காரர்கள் விடவில்லை... மாறாக அந்த சிறுவனை கடுமையாக தாக்கினர். அடித்த அடியில் அவன் செத்தே போயிருப்பான். அப்படி அடித்தார்கள்" என்று 2 பேரை சுட்டு கொன்ற வெள்ளை இன சிறுவனுக்கு டிரம்ப் வக்காலத்து வாங்கி பேசியுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் களம், சூடு பிடித்துள்ளது என்பதையும் தாண்டி கொதிப்பில் உள்ளது.. இன்னும் சொல்ல போனால், போராட்டக்களமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு போராட்டம் வெடித்துக் கொண்டே இருக்கிறது.

ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டதில் இருந்தே, மக்கள் கொந்தளித்து உள்ளனர்.. இன ரீதியான ஆர்ப்பாட்டங்கள்தான் எதிரொலித்து வருகின்றன.அந்த வகையில், கருப்பின மக்களுக்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை நடந்து வருகிறது.

மாற போகிறதா மாற போகிறதா "கலர்".. அதுக்குள்ள 60 தொகுதிகளை ரெடி பண்ணிருச்சா பாஜக.. அப்ப திமுக, அதிமுக கதி?

 போராட்டம்

போராட்டம்

இந்த நிலையில்தான் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள கனோஷா என்ற இடத்தில் ஜேக்கப் பிளேக் என்ற கருப்பின இளைஞரை போலீசார் 7 முறை துப்பாக்கியால் சுட்டதில், அவர் படுகாயமடைந்தார்.. இதனால் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் மோதலானது இப்போது இன்னும் அதிகமாகிவிட்டது.. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போர்ட்லேட்ன்ட் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கூடி போராட்டத்தில் குதித்தனர்.

 துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும்மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அப்போது ஒரு 17 வயது சிறுவன், அவனது பெயர் ரிட்டன்ஹெளஸ். இந்த சிறுவன் தான் வைத்திருந்த ஆட்டோமேட்டிக் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். அதில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார். சுட்ட சிறுவன் வெள்ளை இன அமெரிக்கர் ஆவார்.

 செத்து போயிருப்பான்

செத்து போயிருப்பான்

ரிட்டென்ஹெளஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த சிறுவனை ஆதரித்து டிரம்ப் பேசி வருகிறார். அந்த சிறுவன் செய்தது தவறு இல்லை என்பது போல முட்டு கொடுத்து பேசி வருவது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. "போராட்டக்காரர்களிடமிருந்து அவர் விலகிச் செல்ல முயற்சித்தார். அவர்கள் விடவில்லை. மாறாக அந்த சிறுவனை கடுமையாக தாக்கினர். அடித்த அடியில் அவன் செத்தே போயிருப்பான். அப்படி அடித்தார்கள்" என்று வக்காலத்து வாங்கிப் பேசியுள்ளார்.

ஜனாதிபதி

ஜனாதிபதி

டிரம்ப்பை பொறுத்தவரை அதிபர் என்பதையும் தாண்டி, இவர் பிள்ளைகளை பெற்றவர்.. அதுவும் தன் பெண்ணை ஜனாதிபதியாக்கும் அளவுக்கு ஆசை வைத்திருப்பவர்.. அரசியல் அனுபவம் வாய்ந்த கமலா ஹாரீஸ் தகுதி வாய்ந்தவர் இல்லை என்று சொல்லும் டிரம்ப், மாடலிங் செய்து வரும் தன் மகளே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தகுதியானவர் என்று சொல்லும் அளவுக்கு திறன் படைத்தவராக இருக்கிறார்.

அப்பா

அப்பா

அப்படியென்றால், 17 வயது சிறுவனின் இந்த வன்முறையை கண்டித்திருக்க வேண்டாமா? ஒரு சிறுவனுக்கு சுட்டு கொல்லும் அளவுக்கு இனவெறி இருக்கிறது என்றால், அதை, பிள்ளைகளை பெற்ற ஒரு தகப்பன் என்ற முறையிலாவது கண்டித்திருக்க வேண்டும்.. ஒரு அப்பா ஸ்தானத்தில் அந்த சிறுவனை கண்டித்திருக்க வேண்டும் அல்லவா?

 அட்வைஸ்

அட்வைஸ்

அந்த சிறுவனின் தவறை சுட்டிக்காட்டி, இனவெறி கூடாது என்பதை வலியுறுத்தி இருக்க வேண்டும்.. இந்த வயசில் இது கூடாது என்று அட்வைஸ் தந்திருக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு, ஒரு வெறிபிடித்த சிறுவனுக்கு வரிந்து கட்டி கொண்டு வருவது, டிரம்புக்கு மேலும் சரிவைதான் ஏற்படுத்தும்.. இதையும் அந்த நாட்டு மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

English summary
Donald Trump fails to condemn 17 year old boy for killing Two
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X