வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவை அழைக்க முடிவு.. ஜி7 மாநாட்டை செப்டம்பருக்கு ஒத்தி வைத்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும் ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Recommended Video

    ஜி7 மாநாட்டை செப்டம்பருக்கு ஒத்தி வைத்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

    ஜி7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த நாடுகளின் அதிபர்கள், தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி பொருளாதாரம், வர்த்தகம், வியாபாரம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவர். இந்த மாநாட்டை இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் மாறி மாறி நடத்தும்.

    உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    ஒத்திவைப்பு

    ஒத்திவைப்பு

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை அமெரிக்க நடத்த வேண்டும். இந்த மாநாடுகள் ஜூன் மாதம் 10 முதல் 12-ஆம் தேதி வரை அமெரிக்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாட்டை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    ஸ்பேஸ் எக்ஸ்

    ஸ்பேஸ் எக்ஸ்

    மேலும் இதை செப்டம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்துள்ளார். இந்த தகவலை புளோரிடாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் லாஞ்ச் நிகழ்வை பார்த்துவிட்டு வாஷிங்டன் திரும்பிய போது நிருபர்களிடம் அவர் தெரிவித்தார். மேலும் இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ஒத்திவைப்பு

    ஒத்திவைப்பு

    ஜி7-மாநாடு அதன் தற்போதைய நிலையில் மிகவும் காலாவதியான நாடுகளின் குழு என்றும் தெரிவித்த அவர், உலகில் நடந்து வருவனவற்றை முறையாக பிரதிபலிக்காது என்பதால் ஜி7 மாநாட்டை ஒத்திவைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சிறப்பு விருந்தினர்கள்

    சிறப்பு விருந்தினர்கள்

    கொரோனா வைரஸ் தொற்று குறையாத இந்த நேரத்தில் ஜி7 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஜி7 மாநாட்டை நடத்தும் நாடுகள் ஓரிரு நாடுகளின் தலைவர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடியும்.

    அதிபர்

    அதிபர்

    அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெர்கான் பிரதமர் நரேந்திர மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அது போல் இந்த ஆண்டு ஜி7 மாநாட்டை நடத்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப், சில நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம். அதனால் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களையும் அழைக்க அவர் முடிவு செய்துள்ளார்.

    English summary
    American President Donald Trump postpones G7 summit from June to September as Coronavirus erupts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X