வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை தெரிந்தே பரப்பியிருந்தால்.. அதிக விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும்- டிரம்ப் கோபம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வுகான் லேபிலிருந்து கொரோனா எனும் தொற்றுநோய் சீனாவுக்கு தெரிந்தே பரப்பப்பட்டது என்றால் அந்த நாடு அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா?.. விசாரணையை தொடங்கும் அமெரிக்கா

    உலகில் உள்ள 180-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இவை பொருளாதார பாதிப்பையும் உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன.

    இந்த நிலையில் சீனாவின் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. வைரஸ் பரவியது குறித்து டொனால்ட் டிரம்ப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    சிங்கப்பூரில் கொரோனா தாக்கம் உச்சம்- ஒரே நாளில் 942 பேருக்கு பாதிப்பு சிங்கப்பூரில் கொரோனா தாக்கம் உச்சம்- ஒரே நாளில் 942 பேருக்கு பாதிப்பு

    சீனா செய்யவில்லை

    சீனா செய்யவில்லை

    இதுகுறித்து அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவரிடம் சீனா இந்த வைரஸை வேண்டுமென்றே பரப்பியதா என கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் வைரஸ் பரவியதை சீனா ஆரம்ப கட்டத்திலேயே தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இதனால் ஒட்டுமொத்த உலகமே தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது.

    வேண்டுமென்றே

    வேண்டுமென்றே

    தற்போது கொரோனா குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் சீனாவுக்கே தெரியாமல் அந்த வைரஸ் தவறாக வெளியே வந்துவிட்டிருந்தால் தவறு, தவறு என்றாகிவிடும். ஒரு வேளை சீனாவுக்கு தெரிந்தே வேண்டுமென்றே பரப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டால் அதிக விளைவுகளை அந்த நாடு சந்திக்க நேரிடும்.

    சந்தேகம்

    சந்தேகம்

    சீனாவையும் மீறி தவறுதலாக அந்த வைரஸ் வெளியே வந்துவிட்டதா அல்லது வேண்டுமென்றே வெளியே பரப்பப்பட்டதா.. இவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்களும் வைரஸ் பரவியது குறித்து விசாரணை நடத்துவதாக கூறியுள்ளார். அவர்களது விசாரணை முடிவுகள் என்ன வருகிறது என்பதை பார்ப்போம். நாங்களும் விசாரித்து வருகிறோம். அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 0.33 சதவீதமாக உள்ளதாக கூறுவதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா பதிலடி

    அமெரிக்கா பதிலடி

    முன்னதாக சீன வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியன் கூறுகையில் தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர்தான் இந்த வைரஸை பரப்பினர் என்றார். இதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றது. மேலும் கொரோனா வைரஸை சீன வைரஸ் என டிரம்ப் அழைத்தார். இவ்வாறாக இரு நாடுகளுக்கிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

    English summary
    America President Donald Trump says that China will face consequences if they were knowingly responsible for the virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X