வேகமாக மோதியது விண்கல்.. 1 மாதங்களாக குலுங்கிய பூமி.. அழிந்தது டைனோசர் இனம்!
வாஷிங்டன்: டைனோசர்கள் இனம் அழிவதற்கு காரணமாக கருதப்பட்ட விண்கல் விழும்போது பூமி ஒரு மாதத்திற்கும் மேலாக குலுங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் புது தகவல்களை தெரிவித்துள்ளனர்.
பூமியில் வாழ்ந்த மிகப்பெரும் உயிரினம் என்று சொல்லப்படும் டைனோசர்கள் 66 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக அழியத்தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
விண்ணில் இருந்து பூமியின் மீது பெரிய விண்கல் மோதல் நடைபெற்று அதனால், இந்த டைனோசர்கள் இனம் அழியத்தொடங்கியது என்பதை கேள்வி பட்டு இருக்கிறோம்.

டைனோசர் இனம் அழிவதற்கு..
டைனோசர்களின் படிமங்கள், முட்டைகள் உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் அடிக்கடி கண்டறிந்து அவை வாழ்ந்த காலம் , அவற்றின் வாழ்வியல் முறை போன்றவற்றை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க டைனோசர் இனம் அழிவதற்கு காரணமாக இருந்த விண்கல் மோதலின் போது பூமி பெரும் அதிர்வை எதிர் கொண்டதாக புது தகவல் வெளியாகியிருக்கிறது.

சிக்சுலப் பள்ளம்
மெக்சிகோ நாட்டின் யுகாடான் தீபகற்பத்தில் மிகப்பெரிய சிக்சுலப் பள்ளம் உள்ளது. விண்ணில் இருந்து 10 கி.மீட்டர் பரப்பளவு கொண்ட மிகப்பெரும் விண்கல் பூமியில் விழுந்ததில் இந்த பள்ளம் உருவானதாக நம்பப்படுகிறது. 180 கி.மீட்டர் விட்டம் மற்றும் 20 கி.மீட்டர் ஆழம் கொண்ட இந்த மிகப்பெரும் பள்ளம் (Chicxulub crater) சிக்சுலப் பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.

பூமியில் மிகப்பெரும் நிலநடுக்கம்
டைனோசர் இனம் அழிய காரணமாக இருந்த இந்த விண்கல் மோதலின் போது, பூமியில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக தற்போது புது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 9.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் 10^23 ஜூல்களுக்கு சமமான ஆற்றல் இந்த நிலநடுக்கத்தின் போது வெளிப்பட்டதாம். அதாவது, கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை நாம் அறிவோம். இந்த நிலநடுக்கமும் 9.1 ரிக்டர் அளவுக்கே ஏற்பட்டது.

5 ஆயிரம் மடங்கு அதிகமான ஆற்றல்
இந்த நிலநடுக்கத்திற்கு பிறகு இந்தியா உள்பட பல நாடுகளை சுனாமி தாக்கியது. அப்போது வெளியான ஆற்றலைவிட 5 ஆயிரம் மடங்கு அதிகமான ஆற்றல் விண்கல் மோதலால் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்டதாக விஞ்ஞானிகளின் புது ஆய்வு தெரிவிக்கிறது. நிலநடுக்கத்தால் பல வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரை பூமி குலுங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹெர்மன் பெர்முடஸ்
இந்த மெகா நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான சான்றுகளை கடந்த 9 ஆம் தேதி டென்வரில் நடைபெற்ற GSA Connects- கூட்டத்தில் ஆய்வளர் ஹெர்மன் பெர்முடஸ் அளித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே இதுபற்றிய ஆய்வுகளில் ஹெர்மன் பெர்முடஸ் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் இந்த புது தகவல் டைனோசர்கள் பற்றிய ஆய்வுக்கு மேலும் உதவும் வகையில் அமையும் என்று ஆய்வாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications