நிலவில் நீர் வந்தது எப்படி? சந்திரயான் 1 தந்த "க்ளூ" உடைந்த மர்மம்! ஆஹா பூமிக்கு இருக்கும் கனெக்ஷன்
வாஷிங்டன்: நிலவில் நீர் இருப்பதை இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம் கண்டுபிடித்து உலகிற்கு சொன்னது. நிலவு குறித்த ஆராய்ச்சியில் இது பெரும் திருப்புமுனையாக பார்க்கப்பட்ட நிலையில், நிலவில் நீர் உருவானது எப்படி என்பது குறித்தும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
நாம் வாழும் இந்த பூமியின் ஒரே துணைக்கோளாக நிலவு உள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள நிலவில் என்னதான் இருக்கிறது என்பதை கண்டறிய மனித குலம் பல ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது. நிலவு குறித்த ஆராய்ச்சில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியாவும் முன்னிலை வகிக்கிறது. நிலவில் தண்ணீர் உள்ளதா? பிராண வாயு இருக்கிறதா?

மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? உயிர்கள் வசிக்கின்றனவா? வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா? என அது சார்ந்த தேடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும் சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவை ஆராய்ச்சி செய்து வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திரயான் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலம் முதன்முதலாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்த இந்த விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை முதன் முதலாக உலகுக்கு அறிவித்தது. இதைத்தொடர்ந்து உலகில் எந்த நாடுமே செல்லாத தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம்ஆம் ஆண்டு அனுப்பபட்டது.
எனினும், சாப்ட் லேண்டிங் செய்யும் போது இது சறுக்கலை சந்தித்தது. ஆனாலும், அதன் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தற்போதும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. செயல்பாட்டிலும் உள்ளது. அதைத்தொடர்ந்து அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது.
தொடர்ந்து 14 நாட்கள் ஆய்வுகளை மேற்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகுக்கு சொன்னது. தற்போது உறக்க நிலையில் இருக்கும் சந்திரயான் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்படுத்த முடியுமா? என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க சந்திரயான் 1 விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டது.
நிலவில் உள்ள இந்த தண்ணீர் எப்படி உருவானது என்பதை சந்திரயான் அளித்த தரவுகளை வைத்து புதிய கண்டுபிடிப்புகளை அமெரிக்க பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. சந்திரயான் 1 அளித்த தரவுகளை வைத்து அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகம் நிலவில் நீர் உருவான காரணத்தை கண்டுபிடித்துள்ளது. அதாவது, பூமியில் இருந்து உருவாகும் எலக்ட்ரான் கதிர்களே நிலவில் நீர் உருவாவதற்கான முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக சூரியனில் இருந்து வெளிப்படும் புரோட்டான் கதிர்கள் நிலவின் தரைப்பகுதியில் ஏற்படுத்திய அதிர்வே நீர் ஆதாரத்திற்கு காரணமாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. பூமியின் பிளாஸ்மா அடுக்குகளில் உள்ள எலக்ட்ரான்களே நிலவில் தட்பவெப்ப நடைமுறைகளுக்கு பங்களிப்பதாக கூறப்பட்டுள்ளது.
தட்பவெப்ப நிலை நடைமுறை என்பது நிலவில் உள்ள பாறைகள் உடைவது அல்லது கனிமங்கள் கரைவது உள்ளிட்டவற்றை குறிக்கிறது. நிலவு உருவானது எப்படி என்பது குறித்தும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் அறிந்து கொள்ள நிலவில் உள்ள நீரின் செறிவு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வது மிக முக்கியம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications