‛எரிந்த முடி’.. ‛சென்ட்’ விற்பனையில் இறங்கிய எலான் மஸ்க்.. ஒரு பாட்டில் விலையை பாருங்க.. தலைசுத்துதா?
வாஷிங்டன்: உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் புதிதாக வாசனை திரவியம் தொழிலில் இறங்கி உள்ளார். இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பயோவை ‛வாசனை திரவிய விற்பனையாளர்'' என மாற்றம் செய்துள்ளார். எரிந்த முடி என பெயரிடப்பட்டுள்ள இந்த வாசனை திரவியத்தின் விலையை கேட்டு இந்தியர்கள் தலைசுத்தி போய்உள்ளனர்.
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் இருவர் தான் விண்வெளி துறையில் சாதிக்கும் ‛ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக உள்ளார்.
இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். குறிப்பாக ட்விட்டரில் இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் அதிகம் கவனம் ஈர்க்கும்.

எலான் மஸ்க்கின் ட்விட்டர் ஆர்வம்
மேலும் அவர் தொடர்ச்சியாக பிற தொழில்களில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தான் சமீபத்தில் ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு தடைகள் உள்ளது என கூறினார். மேலும் ட்விட்டரை வாங்க உள்ளதாகவும், விரைவில் ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் கொண்டு வரப்படும் எனவும் கூறினார். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கி நிர்வாக குழுவில் இடம்பிடித்த அவர் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க முடிவு செய்தார். இதற்கான ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில் எலான் மஸ்க் பின்வாங்கினார். தற்போது எலான் மஸ்க்கிற்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கு இடையேயான பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

வாசனை திரவிய விற்பனையாளராக...
இதற்கிடையே தான் தற்போது எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை வாசனை திரவிய விற்பனையாளர் என அடையாளப்படுத்தி உள்ளார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ‛Perfume Salesman' என பயோ வைத்துள்ளார். மேலும் அவர் புதிதாக வாசனை திரவியத்தை அறிமுகம் செய்துள்ளார். பர்ன்ட் ஹேர் (எரிந்த முடி) என பெயரிடப்பட்டுள்ள இந்த வாசனை திரவியம் தான் ‛‛பூமியின் சிறந்த நறுமணம்'' என கூறியுள்ளார்.

10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை
மேலும், இதுதொடர்பாக அவர் தொடர்ந்து சில ட்விட்டுகளை செய்துள்ளார். அதில், ‛‛என்னை போன்றவர்கள் வாசனை திரவிய தொழிலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. தற்போது வாசனை திரவியத்தை அறிமுகம் செய்த சில நிமிடங்களிலேயே 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனையாகிவிட்டன. கிரிப்டோ கரன்சி மூலமும் வாசனை திரவியத்தை வாங்கி கொள்ள முடியும்'' என தெரிவித்துள்ளார்.

விலை எவ்வளவு தெரியுமா?
இந்த எரிந்த முடி என பெயரிடப்பட்டுள்ள இந்த வாசனை திரவிய பாட்டிலின் விலை என்பது 100 அமெரிக்க டாலரும். இதன் இந்திய மதிப்பு என்பது ஏறக்குறைய ரூ.8,230ஆகும். அதாவது எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ள வாசனை திரவியத்தின் விலை ரூ.8,400 ஆகும். இந்த வாசனை திரவியத்தின் விற்பனையை எலான் மஸ்க்கின் போரிங் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications