அமெரிக்காவுக்கே விபூதி அடித்த ரஷ்யா.. ஒரே அடியாக ராணுவத்திலேயே ஊடுருவல்! மிரண்டுபோன டாப் அதிகாரிகள்
வாஷிங்டன்: உலக வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்க ராணுவத்திலேயே ரஷ்ய நிறுவனம் ஒன்று ஊடுருவி உள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். இரு நாடுகளுமே மற்ற நாட்டை மிகக் கடுமையாக விமர்சிப்பதை எப்போதும் வாடிக்கையாகவே கொண்டு இருக்கும்.
அமெரிக்காவின் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் ரஷ்யா பயன்படுத்தாது. ரஷ்யாவின் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் அமெரிக்கா பயன்படுத்தாது. கொரோனா வேக்சினிலும் இந்த நிலை தொடர்ந்ததைப் பார்த்து இருப்போம்.

அமெரிக்கா
இப்படி இருக்கும் போது, ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நேரடியாக அமெரிக்க ராணுவம் வரையிலும் ஊடுருவி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணுவம் மட்டுமின்றி ஆப்பிள் மற்றும் பிளே ஸ்டோர்களில் இருக்கும் பல ஆயிரம் ஸ்மார்ட்போன் செயலிகளில் புஷ்வூஷ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோடிங் தான் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புஷ்வூஷை பலரும் அமெரிக்க நிறுவனம் என்றே முதலில் நினைத்தனர்.

ரஷ்ய நிறுவனம்
ஆனால், விசாரணையில் தான் அது ரஷ்ய நிறுவனம் என்பது உறுதியானது. அமெரிக்காவில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கூட இந்த புஷ்வூஷ் அமெரிக்க நிறுவனம் என்றே நம்பி ஏமாந்துவிட்டதாகத் தெரிவித்து உள்ளது. அது ரஷ்ய நிறுவனம் என்பது உறுதியான பின்னர், சிடிசி-இன் ஏழு செயலிகளில் இருந்து புஷ்வூஷ் கோடிங் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க ராணுவம்
சிடிசி மட்டுமின்றி அமெரிக்க ராணுவம் கூட இதற்குப் பலியாகிவிட்டது. புஷ்வூஷ் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் என அந்நாட்டு ராணுவமும் நம்பி, அதன் கோடிங்களை பயன்படுத்தி உள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் புஷ்வூஷ் கோடிங்கை கொண்ட செயலியை அமெரிக்க ராணுவம் நீக்கியுள்ளது. இந்த செயலியை வைத்துத் தான் அமெரிக்கா அதன் வீரர்களுக்கு முக்கிய போர்ப் பயிற்சியை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா
ரஷ்யாவில் அனைத்து தகவல்களையும் அந்த கம்பெனி பகிரங்கமாகவே தாக்கல் செய்து உள்ளது. அதன்படி இந்த புஷ்வூஷ் நிறுவனம் ரஷ்யாவின் சைபீரிய நகரமான நோவோசிபிர்ஸ்கை தலைமையிடமாகக் கொண்டு இருக்கிறது. அங்கு ஐடி நிறுவனமாக நிறுவனமாகப் பதிவு செய்துள்ள நிலையில், டேட்டா பிராசஸிங்கையும் இது செய்கிறது. மேலும், அந்த நிறுவனத்தில் சுமார் 40 நபர்கள் வேலை செய்கிறார்களாம்.

பொய்யான தகவல்
கடந்த ஆண்டு மட்டும் $2.4 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ. 19 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், இந்த புஷ்வூஷ் நிறுவனம் முழுக்க முழுக்க ரஷ்ய அரசுக்குத் தான் வரியைச் செலுத்துகிறது. ரஷ்யாவில் இப்படி அனைத்து தகவல்களையும் பகிரங்கமாகக் கூறியுள்ள போதிலும், அமெரிக்க ஒழுங்குமுறை ஆவணங்களில், இது தன்னை அமெரிக்க நிறுவனம் போலவே காட்டியுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதன் தலைமையிடம் கலிபோர்னியா, மேரிலாந்து மற்றும் வாஷிங்டன் நகரங்களில் இருப்பதாக மாறி மாறி பொய்யான தகவல்களைக் கூறியுள்ளது.

ஆதாரம் இல்லை
புஷ்வூஷ் நிறுவனம் சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கு கோட்டிங் மற்றும் டேட்டா பிராசஸிங் சேவையை வழங்குகிறது. ஸ்மார்ட்போன்களில் இணையதளங்களைப் பயன்படுத்துவோருக்குத் தேவையான புஷ் நோட்டிவிக்கேஷனை அனுப்ப இவர்களின் கோட் பயன்படுகிறது. இருப்பானும், தங்கள் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்கவில்லை என்றே புஷ்வூஷ் நிறுவனம் கூறுகிறது. தற்போது வரை அமெரிக்க யூசர்கள் தகவல்களை புஷ்வூஷ் நிறுவனம் தவறாக பயன்படுத்தியதற்கும் எந்தவொரு ஆதாரமும் இல்லை.

ஏன் முக்கியம்
இருந்த போதிலும், ரஷ்ய விதிகளின் படி ரஷ்ய நிறுவனங்கள் அந்நாட்டு அரசு கேட்டால் அனைத்து டேட்டாக்களையும் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து புஷ்வூஷின் நிறுவனர், மேக்ஸ் கோனேவ் கூறுகையில், "எங்கள் நிறுவனம் ரஷ்யாவைச் சேர்ந்தது என்பதை ஒருபோதும் மறைக்க முயலவில்லை. நான் ரஷ்யனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.. இதை நான் ஒருபோதும் மறைக்க மாட்டேன். அதேநேரம் எங்களுக்கும் ரஷ்ய அரசுக்கும் தொடர்பில்லை. தரவுகள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் தன் உள்ளது" என்றார்.

கண்காணிப்பு
வெளிநாட்டில் வைத்து இருந்தாலும் கூட ரஷ்ய அரசு கேட்டால் தரவுகளை நிறுவனம் கொடுத்தே தீர வேண்டும் என்றே சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே ரஷ்யா வெளிநாட்டுத் தலைவர்களைக் கண்காணிக்க முயல்வதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த புஷ்வூஷ் நிறுவனத்தின் கோடிங் பல அரசு மற்றும் சர்வதேச தளங்களிலும் அமெரிக்கா பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications