பாரமே இறங்கிடுச்சே.. ரூல்சை மாற்றிய அமெரிக்கா! H1B விசா -இந்தியாவுக்கு கொத்தாக கிடைக்கப்போகும் லாபம்
வாஷிங்டன்: எச்1பி விசாக்களை அமெரிக்காவிற்கு உள்ளேயே புதுப்பிக்கலாம் என்ற விதியை அந்நாட்டு அரசு கொண்டு வந்து இருப்பதன் மூலம் இந்தியர்கள் பெரும் பயன் கிடைக்கப்போகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள எச் 1 பி விசாவை புதுப்புக்க தங்கள் சொந்த நாடுகளுக்கு சென்ற வர தேவையில்லை என வெளியிடப்பட்டு இருக்கும் அறிவிப்பு இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு மட்டும் அனுமதியளிக்கும் எச்1பி விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியர்கள் உட்பட பல வெளிநாடுகளை சேர்ந்த பணியாளர்களுக்கு எச்1பி விசாவை அந்நாடு வழங்கி வந்தது. அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு வெளிநாட்டவர்களை தேர்வு செய்ய குறுகிய கால அனுமதியளிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டதே எச்1பி விசா.

இந்த விசாவை பெற்றவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி பணிபுரியலாம். அதன் பின்னர் சொந்த நாட்டுக்கு சென்று புதுப்பித்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழையலாம். எச்1பி விசாவுடன் 6 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் பணியாற்றுபவர்கள் அந்நாட்டின் குடியுரிமைக்கான கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால், கடந்த முறை டொனால்டு டிரம்ப் அரசு ஆட்சியில் இருந்தபோது எச்1பி விசாதாரர்கள் அமெரிக்காவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகினர். எச்1பி விசா விதிகளில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் தற்போதைய அமெரிக்க அரசு எச்1பி விசாதாரர்களுக்கான சூப்பரான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதன்படி எச்1பி விசாவை நீட்டிக்க சொந்த நாட்டுக்கு சென்று அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்பிங் பெற வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டு, அமெரிக்காவை விட்டு வெளியில் செல்லாமலேயே ஸ்டாம்பிங் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தேவையற்ற பொருட் செலவும், நேர விரயமும் குறையும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதுகிறார்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் SEPC எனப்படும் சேவை ஏற்றுமதி ஊக்கிவிப்பு அமைப்பு, அமெரிக்க அரசின் இந்த முடிவு இந்தியாவை சேர்ந்த மென்பொருள் தொழிலாளர்களுக்கு பெரும் பயனளிக்கும் என்று கூறியுள்ளது. ஐடி ஊழியர்களின் விரைவான செயல்பாட்டுக்கு இது உதவும் என்று குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, இதனால் உள்நாட்டு ஐடி தொழிலாளர்களுடன், வெளிநாட்டு வாடிக்கையாளருக்கு நல்ல நெருக்கம் ஏற்படும்.
இதுகுறித்து SEPC தலைவர் சுனில் எச் தலாஹி தெரிவிக்கையில், "இந்திய ஐடி தொழிலாளர்கள் வேகமாக வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளரின் இடங்களுக்கு விரைவாக செல்ல முடிந்தார், அவரது தேவைகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும். நல்ல உறவு ஏற்படும். வாடிக்கையாளர் திருப்தியையும் அதிகப்படுத்த முடியும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மென் பொருட்களுக்கு அமெரிக்காவிலேயே பெரிய சந்தை உள்ளது. இந்த முன்னேற்றம் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும். மென்பொருள் ஏற்றுமதிக்கான வளர்ச்சி முன்பு 8 முதல் 12 என்ற சதவீத அளவில் இருந்தது. தற்போது இது 13-12 சதவீத அளவில் உயர வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் உரிய நேரத்தில் பிராஜெக்டுகளை வழங்க முடியும். தரமான முடிவுகளை தர முடியும். மென்பொருள் சேவை வழங்குனர்களில் இந்தியாவின் புகழ் அதிகரிப்பதுடன் ஏற்றுமதி வாய்ப்புகளும் பெருகும்." என்றார்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications