"மனிதர்களே ஒரு வேற்று கிரகவாசிகள் தான்" பறக்கும் தட்டில் பூமிக்கு வந்தனர்.. அப்பல்லோ விஞ்ஞானி!
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வேற்று கிரகவாசிகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், அப்பல்லோ திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானி, மனிதர்களே ஒரு வேற்று கிரகவாசிகள் தான் என்றும், வேறு கிரகத்தில் இருந்து பறக்கும் தட்டு மூலம் மனிதர்கள் பூமிக்கு வந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
வேற்று கிரக வாசிகள் குறித்து அவ்வப்போது வியக்கும் படியாக பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும்.
ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில் மேலை நாடுகளில் சிலர் வேற்று கிரகவாசிகளை பார்த்தாக கூறி பரபரப்பை ஏற்படுத்துவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாக உள்ளது.

வேற்று கிரகவாசிகள்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் வேற்று கிரகவாசிகள் வெறும் கட்டுக்கதையா? இல்லை உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய ஒருபக்கம் ஆய்வை நடத்தி கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட வேற்று கிரகவாசியை காரில் பார்த்ததாக கூகுள் எர்த் யூசர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், பறக்கும் தட்டை பார்த்ததாகவும் சில விமானிகள் கூட கூறியதாக செய்திகள் வெளியாகி வேற்று கிரகவாசிகள் பற்றிய நமது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்து இருக்கும்.

மனிதர்களே ஒரு வேற்று கிரகவாசிகள்
நம்மை போலவே வேறு கிரகத்திலும் கண்டிப்பாக ஏதேனும் உயிர்கள் வாழும் என்று ஒரு தரப்பினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். ஆனால், இதையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் தான் அதற்கான சாத்தியமே இல்லை என்று சிலர் கூறும் தகவலாக இருக்கிறது. இந்த விவாதங்கள் நீண்ட காலமே சென்று கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிலவுக்கு மனிதனை அனுப்பிய அப்பல்லோ திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானி, மனிதர்களே ஒரு வேற்று கிரகவாசிகள் தான் என ஒரே போடாக போட்டுள்ளார்.

ஓடம் மூலம் பூமிக்கு வந்துள்ளனர்
வேறு ஒரு கிரகத்தில் இருந்து மனிதர்கள் பூமிக்கு ஒரு ஓடம் (ஷிப்) மூலம் பூமிக்கு வந்து, நாகரீக வாழ்க்கை முறையை தொடங்கியிருக்கலாம் என்று சொல்லி அதிரவைத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''நாமே ஒரு வேற்றுக்கிரகவாசிதான். ஆனால் வேற்றுக்கிரகவாசிகள் வேறு யாரோ என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். எங்கிருந்தோ வந்தவர்கள் நாம் தான். ஏனென்றால் யாராவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக சிறிய விண்கலத்தில் ஏறி இங்கு வந்து தரையிறங்கி இருக்கின்றனர். அதன் பிறகு இங்கு நாகரீக சமூகத்தை தொடங்கியிருக்கிறார்கள்" என்றார்

2020-ஆம் அண்டு
இந்த தகவலை அல் வோர்டன் என்ற அந்த விஞ்ஞானி இப்போது சொல்லவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2020 ஆம் ஆண்டு ஐடிவி குண்ட் மார்னிங் பிரிட்டன் என்ற தொலைக்காட்சியில் அளித்த பேட்டியின் போது இந்த வினோத தகவலை தெரிவித்து இருக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த டெய்லி ஸ்டார் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இறப்பதற்கு முன் கொடுத்த தகவல்
1971 ஆம் ஆண்டு நிலவுக்கு பயணம் மேற்கொண்ட அப்பல்லோ 15 குழுவில் அல் வோர்டன் இடம் பெற்றிருந்தார். விண்வெளியில் 12 நாட்கள் கழித்த இவர், நிலவின் பாறையில் வெறும் 39 நிமிடங்கள், 7 வினாடிகள் மட்டுமே இருந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்பு அவர் கொடுத்த தகவல்தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications