மோடி என் நண்பர்.. இந்தியா - அமெரிக்கா உறவை மீட்டெடுப்பேன்.. அந்தர் பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியா உடனான உறவை புதுப்பிப்பீர்களா? என்ற கேள்விக்கு, ‛‛நான் எப்போதும் அதனை செய்வேன். மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன்'' எனக்கூறி உள்ளார்.

நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு டொனால்ட் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி தான் முக்கிய காரணம். இந்த வரியின் காரணமாக நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

donald trump us narendra modi

அமெரிக்கா உடனான வர்த்தக சரிவை சரிசெய்ய நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. மேலும் சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் நெருக்கம் காண்பித்தார்.

இது டிரம்பின் தூக்கத்தை கலைத்துள்ளது. இதற்கிடையே தான் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சேர்ந்து இருக்கும் போட்டோவை டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதில், ‛‛நாம் இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அவர்கள் ஒன்றாக நீண்டகால மற்றும் வளமான எதிர்காலத்தை கொண்டிருக்கட்டும்'' என புலம்பியிருந்தார்.

இந்நிலையில் தான் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ட்ரூத் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்ட பதிவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர், ‛‛இந்தியாவை, சீனாவிடம் இழந்ததற்கு யார் காரணம்?'' என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு, டொனால்ட் டிரம்ப், ‛‛நாங்கள் காரணம் இல்லை என்று நினைக்கிறேன். இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உங்களுக்கு தெரியும். அதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதுபற்றி நான் அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். மேலும் இந்தியா மீது மிகப்பெரிய வரியை விதித்தோம். இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தோம். இது மிக அதிகமான வரி'' என்றார்.

மேலும், ‛‛தற்போதைய இந்த பாயிண்ட்டில் இந்தியா உடனான உறவை புதுப்பிப்பீர்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛நான் எப்போதும் அதனை செய்வேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. இது பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் இங்கு வந்து சென்றார்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+