Trump India Tariff: இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி! ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் அபராதமும் இருக்கு.. டிரம்ப் தடாலடி
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு இனி அமெரிக்காவில் 25% வரி என டிரம்ப் அறிவித்துள்ளார். உலகிலேயே அமெரிக்கப் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை இந்தியா தான் விதிக்கிறது என்றும் இதனால் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாலும் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரிகளை அறிவித்து வருகிறார். வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள டிரம்ப் ஜூலை 31ம் தேதி வரை கெடு விதித்திருந்தார். இதனால் பல்வேறு உலக நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

உடன்பாடு இல்லை
இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை சில வாரங்களாகவே தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், பால் பொருட்கள், விவசாய துறையில் உடன்பாடு எட்டப்படாததால் ஒப்பந்தம் இறுதியாகவில்லை. இதற்கிடையே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு இனி அமெரிக்காவில் 25% வரி என டிரம்ப் அறிவித்துள்ளார். உலகிலேயே அமெரிக்கப் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை இந்தியா தான் விதிக்கிறது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களையும் எண்ணெய்யையும் இந்தியா அதிகம் வாங்குவதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், இதன் காரணமாகவே வரியையும் அபராதத்தையும் விதிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தடாலடி
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில், "இந்தியா நமது நண்பனாக இருந்தாலும், பல ஆண்டுகளாக நாம் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வர்த்தகத்தையே செய்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. உலகிலேயே அதிகபட்ச வரியை இந்தியா விதிக்கிறது. மேலும், அவர்கள் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்குக் கடுமையான வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளனர்.
அபராதமும் இருக்கு
மேலும், அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளனர். மேலும் ரஷ்யா உக்ரைன் உடன் போரிடுவதை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். ஆனால், இந்தியா சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இவை எல்லாம் நல்லதல்ல! எனவே இந்தியா ஆகஸ்ட் முதல் 25% வரியைச் செலுத்தும். இதுபோக அபராதமும் விதிக்கப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்னொரு போஸ்ட்டில், இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய வர்த்தக பற்றாக்குறை நிலவுவதாக டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதியாகவில்லை என்றும் இதனால் இந்தியா மீது 25% வரை வரி விதிக்கப்படலாம் என்று டிரம்ப் நேற்று சூசகமாகத் தெரிவித்தார். இந்தச் சூழலில் தான் இதை அதிகாரப்பூர்வமாகவே டிரம்ப் இப்போது அறிவித்திருக்கிறார்.
இந்தியா அமெரிக்கா பேச்சுவார்த்தை
இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இதுவரை எந்த இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை. அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மற்ற நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் அவர் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications