ரஷ்யாவிடம் இருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது.. உறுதி கொடுத்த மோடி.. டிரம்ப் சொன்ன மேட்டர்!
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மாஸ்கோவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இது ஒரு பெரிய அடி என்று கூறிய அவர், இந்தியாவைத் தொடர்ந்து சீனாவையும் இதையே செய்ய வைக்கப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடங்கியது. இதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தின. இதனால் ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன் வந்தது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அதிகரித்தது.

இதனால் இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு வலுப்பெற்றது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் டென்ஷனான டிரம்ப், கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா அளிக்கும் நிதியை உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்துகிறது என்று கூறி, இந்தியா மீது 25 சதவிகிதம் கூடுதலாக வரியை விதித்தார் டிரம்ப்.
இதனால் இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 50 சதவிகிதமாக உயர்த்தியது. இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா படிப்படியாக குறைத்து வருவது தெரிய வந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ரூ.25,600 கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இது சுமார் 14 சதவிகிதம் வரை குறைவாகும்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதில் எனக்கு விருப்பவில்லை. இப்படியான சூழலில் ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இது ஒரு பெரிய அடி என்று கூறிய டிரம்ப், இந்தியாவைத் தொடர்ந்து சீனாவையும் இதையே செய்ய வைக்கப் போகிறேன். அதேபோல் கச்சா எண்ணெய் கொள்முதலை உடனடியாக இந்தியாவால் நிறுத்த முடியாது என்று கூறியதோடு, படிப்படியாக விரைவில் நிறுத்திவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
-
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா? -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
டிரம்பின் கோல்டு காயின் பிசினஸ்.. அமெரிக்க அதிபர் சட்டத்தை மீறுகிறாரா? என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications