வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிகப்பெரிய சக்தியாக மாறிவரும் இந்தியா! அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்காது.. வெள்ளை மாளிகை ‛மெசேஜ்’

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியா நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான உறவுகளில் தனித்துவமான கொள்கைகளை கொண்டுள்ளது. இதனால் இந்தியா, அமெரிக்காவின் நட்பு வட்டாரத்தில் நீண்டகாலம் இருக்காது. மாறாக இந்தியா மிகப்பெரிய சக்தி வாய்ந்த சுதந்திரமான நாடாக மாறும். தற்போதைய சூழலில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாற வேண்டும் என்ற விருப்பத்துடன் செயல்பட்டு வருகிறது என அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் கர்ட் கம்ப்பெல் கூறினார்.

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் உயரதிகாரியாக இருப்பவர் கர்ட் கம்ப்பெல். இவர் வெள்ளை மாளிகையின் ஆசிய ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர்நேற்று ஆஸ்பென் பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தின்போது அவரிடம் இந்தியா பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு கர்ட் கம்ப்பெல் கூறியதாவது:

சென்னையை நெருங்கிய மாண்டஸ் புயல்.. எங்கெல்லாம் அதி கனமழை?- வானிலை மையம் சென்னையை நெருங்கிய மாண்டஸ் புயல்.. எங்கெல்லாம் அதி கனமழை?- வானிலை மையம்

ஆழமான உறவு

ஆழமான உறவு

அமெரிக்கா-இந்தியா இடையே ராஜாங்க ரீதியில் நல்ல உறவு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா எந்த நாடுகளுடன் இவ்வளவு ஆழமான அதேநேரத்தில் பலப்படுத்தப்பட்ட உறவை கொண்டிருக்கவில்லை என நினைக்கிறேன். இருநாடுகளும் தொழில்நுட்பம் உள்பட பிற விஷயங்களில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இது இருநாடுகளின் மக்களிடையே நல்ல உறவை ஏற்படுத்தும். 21ம் நூற்றாண்டில் அமெரிக்கா-இந்தியா நாடுகளின் உறவு என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா

அதேநேரத்தில் இந்தியா என்பது தனித்துவமான ராஜாங்க ரீதியிலான கொள்கைகளையும், உறவுகளையும் கொண்டுள்ளது. இதனால் இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடாக நீண்டகாலம் இருக்காது. மாறாக இந்தியா மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடாக இருக்கும். மேலும் சுதந்திரமான நாடாக இந்தியா செயல்படும். தற்போதைய சூழலில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாற வேண்டும் என்ற விருப்பத்துடன் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பிரிவிலும் வளர்ச்சி

ஒவ்வொரு பிரிவிலும் வளர்ச்சி

இருப்பினும் தற்போதைய சூழலில் அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவு என்பது நன்றாகவே தொடர்கிறது. அதோடு ஒவ்வொரு பிரிவுகளிலும் இருநாடுகளும் வளர்ந்து வருகின்றன. அமெரிக்கா, இந்தியா நாடுகள் கடந்த காலங்களில் பல சவால்கள், பல தடைகளை சந்தித்துள்ளன. இருப்பினும் இருநாடுகளும் லட்சியத்தின் அடிப்படையில் பல துறைகளில் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளன. இதற்கு இருநாடுகள் இடையேயான உறவு தான் காரணம். விண்வெளி, கல்வி, காலநிலை மாற்றம், தொழில்நுட்பம் என அனைத்து விஷயங்களிலும் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த உறவு

ஒருங்கிணைந்த உறவு

சீனா விவகாரத்தில் குவாட் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேசி கொண்டனர். மேலும் இந்தியா-அமெரிக்காவின் உறவு என்பது சீனா ஏற்படுத்தும் பதற்றத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. இது இயல்பாக இருநாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளாலும், ஆழ்ந்த புரிதலின் மூலமாகவும் உருவானதாகும். என்னை பொறுத்தவரை இந்தியா என்பது ஒரு சக்திவாய்ந்த நாடாகும். மேலும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானிஷ் 2023ல் குவாட் அமைப்பு (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா நாடுகள் குழு) மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களின் நிலவரங்களோடு எங்களையும் ஒருங்கிணைக்க செய்யும்'' என்றார்.

சீனா விவகாரம் பேச்சு ஏன்?

சீனா விவகாரம் பேச்சு ஏன்?

சமீபகாலமாக சீனாவின் ராணுவ சூழ்ச்சி அண்டை நாடுகளிலும், இந்தோ-பசிபிக் பகுதியிலும் உள்ளது. இந்தியாவுடன் மோதல் போக்கை சீனா கடைப்பிடிக்கிறது. தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளுக்கும், தெற்கு சீனக்கடல் முழுவதுக்கும் சீனா உரிமை கோருகிறது.தெற்கு சீன கடலில் சீனா செயற்கை தீவுகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. மேலும் கிழக்கு சீனக் கடலில் ஜப்பானுடன் சீனாவுக்கு மோதல் உள்ளன. இதனால் இருநாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு குவாட் அமைப்பில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேசினர். இதனை தான் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடன் சேர்ந்து செயல்பட தயார்

இந்தியாவுடன் சேர்ந்து செயல்பட தயார்

முன்னதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு என்பது வலுவாக உள்ளது. கடந்த ஜி20 மாநாட்டின் இந்தியாவின் தலைமைக்கு நாங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளோம். தற்போது ஜி 20 தலைமையை இந்தியா பெற்றுள்ளதால் வழக்கத்தை விட இன்னும் நெருக்கமாக இந்தியாவுடன் சேர்ந்து செயல்பட காத்திருக்கிறோம். பிராந்தியங்கள் மற்றும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இந்தியாவோடு சேர்ந்து செயல்படுவோம்'' என்றார்.

English summary
India has unique principles in diplomatic relations between countries. As a result, India will not be an ally of America for long. Instead India will become a superpower. And India will function as an independent country. In the current environment, India is working with the desire to become a superpower says Kurt Campbell, US White House Asia Coordinator.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X