வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தந்தை சடலத்தின் முன் சிரித்தபடி ஒரு போட்டஷூட்.. அதற்குக் கொடுத்த விளக்கம் இருக்கே.. ஸ்ப்பா முடியல!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா மாடல் ஒருவர் உயிரிழந்த தனது தந்தையின் உடலின் முன் ஃபோட்டோஷூட் நடத்தி, அதைத் தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார். இதையுட்டுத்து அந்த மாடலை இணையத்தில் அனைவரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 20 வயது மாடல் ஜெய்ன் ரிவேரா. இன்ஸ்டாகிராம் மாடலான இவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட படங்கள் இணையத்தில் வைரலானது, ஆனால் நல்ல காரணத்திற்காக இல்லை. மிக மிக மோசமான ஒரு காரணத்திற்காக!

இலங்கை தமிழர் நலன் ஆலோசனை குழு... கனிமொழி இடத்தில் கலாநிதி... ஈழத்தமிழர்கள் அப்செட்?இலங்கை தமிழர் நலன் ஆலோசனை குழு... கனிமொழி இடத்தில் கலாநிதி... ஈழத்தமிழர்கள் அப்செட்?

 அமெரிக்க மாடல்

அமெரிக்க மாடல்

புளோரிடாவைச் சேர்ந்த ஜெய்ன் ரிவேராவின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட இறுதிச் சடங்கின்போது ஜெய்ன் ரிவேரா செய்த செயல் அங்கு வந்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. திறந்த நிலையில் இருக்கும் தந்தையின் சவப்பெட்டிக்கு அருகில் நின்று ஜெய்ன் ரிவேரா ஃபோட்டோஷூட்டை நடத்தியுள்ளார். இது இறுதிச் சடங்கிற்கு வந்தவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 சிரித்தபடி போஸ்

சிரித்தபடி போஸ்

அத்துடன் நிற்காமல் இது தொடர்பான சில போட்டோக்களை இவர் இணையத்திலும் பகிர்ந்துள்ளார். கறுப்பு நிற உடையில் இருக்கும் ஜெய்ன் ரிவேரா, ஒரு போட்டோவில் தனது தந்தையின் சவப்பெட்டி முன் சிரித்தவாறே நின்று போஸ் கொடுக்கிறார். மற்றொரு படத்தில் கைகளைக் கூப்பி வணக்கம் வைப்பது போலச் சோகமான முகத்துடன் போஸ் கொடுத்துள்ளார். மேலும், "அப்பா நீங்கள் எனது மிகச் சிறந்த நண்பர்" என்றும் பதிவிட்டுள்ளார்.

 வறுப்பதெடுக்கும் நெட்டிசன்கள்

வறுப்பதெடுக்கும் நெட்டிசன்கள்

இந்த போஸ்ட்கள் உடனடியாக இணையத்தில் வைரலானது. பலரும் ஜெய்ன் ரிவேராவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தந்தையின் சடலத்தின் முன் ஃபோட்டோசூட் நடத்தும் எண்ணம் எப்படி தான் வந்தது என பலரும் சாடி வருகின்றனர். இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அவர் டெலிட் செய்துவிட்டார். இருப்பினும், அவர் இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்யும் முன் சிலர் அதை ஸ்கீரின்ஷாக் எடுத்து வைத்துக் கொண்டனர். அதை வைத்து ஜெய்ன் ரிவேராவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

 புது விளக்கம்

புது விளக்கம்

இது தொடர்பாக ரிவேரா என்பிசி நியூஸிடம் பேசுகையில் "எதிர்மறையான கருத்துகள் வருவதை ஏன் எனப் புரிகிறது. ஆனால் எனது தந்தை உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் நான் செய்ததை ஆதரித்தே இருப்பார். ஒவ்வொருவரும் தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பை அவரவர் வழியில் கையாளுகிறார்கள். சிலர் மிகவும் பாரம்பரியமானவர்கள், மற்றவர்கள் செய்வது தவறாகப் பார்க்கப்படலாம். இதற்காக முன் பல சந்தர்ப்பங்களில் அவர் என்னுடன் இருந்துள்ளார். அதேபோல செய்ய வேண்டும் என்று எண்ணியே நான் இதைச் செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

வைரல்

வைரல்

இருப்பினும், இந்த விளக்கத்தை எல்லாம் நெட்டிசன்கள் கேட்பதாக இல்லை. தந்தையின் சவப்பெட்டி முன் சிரித்தப்படி ஃபோட்டோஷூட் நடத்த எப்படி தான் இந்த பெண்ணுக்கு மனசு வந்தது என பலரும் திட்டி வருகின்றனர். அதேநேரம் இன்னும் சிலர் அந்த பெண் செய்தது தவறு தான் என்றாலும் கூட இணையத்தில் ஓவராக அந்த பெண்ணை ட்ரோல் செய்வதாக பதிவிட்டு வருகின்றனர்.

English summary
US model viral photoshoot on Father's Funeral. photoshoot on Father's Funeral in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X