"அமெரிக்காவிலேயே டிரம்ப் மீது டிரோன் பாயும்.." ஈரான் வெளிப்படையாக கொலை மிரட்டல்! உச்சக்கட்ட பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மூத்த ஈரான் அதிகாரி கொலை மிரட்டல் விடுத்திருந்தார். அமெரிக்க அதிபர் ஒருவருக்கு ஈரானில் இருந்து வந்த இந்தக் கொலை மிரட்டல் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது டிரம்ப் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

மத்தியக் கிழக்கில் கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வருகிறது. ஈரானைச் சுற்றிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாகச் சொல்லி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் அமெரிக்காவும் சேரவே பதற்றம் அதிகரித்தது. இருப்பினும், நல்வாய்ப்பாக அந்த மோதல் உடனடியாக முடிவுக்கு வந்தது. இப்போது அங்கு மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

Iran s Drone Strike Threat on Trump His Witty Not Too Big Into Sunbathing Reply

ஈரான்

இதற்கிடையே ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் முக்கிய ஆலோசகரான முகமது-ஜவாத் லாரிஜானி டிரம்ப்பிற்கு மிரட்டல் விடுப்பது போன்ற கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது டிரம்ப் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ எஸ்டேட்டுக்கு அடிக்கடி செல்வதைக் குறிப்பிட்ட லாரிஜானி, டிரம்ப் கொல்லப்படலாம் என்பது போலக் கூறியிருந்தார்.

டிரம்ப் மீது டிரோன் பாயும்

ஈரான் அரசு டிவியில் ஒளிபரப்பான அந்த நேர்காணலில் லாரிஜானி, "டிரம்ப் செய்துள்ள சில விஷயங்களால் அவரால் இனி மார்-ஏ-லாகோவில் சூரிய குளியல் எடுக்க முடியாது. இனிமேல் அவர் எங்குச் சூரிய குளியல் எடுக்கப் படுத்தால் ஒரு சிறிய ஆளில்லா விமானம் அவரை தாக்கக்கூடும். அது மிகவும் எளிது" என்று கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து டிரம்ப்பிற்கு எதிரான கொலை மிரட்டலாகவே பார்க்கப்பட்டது.

அவர் எந்தவொரு குறிப்பிட்ட திட்டம் அல்லது எந்த நேரத்தில் தாக்குதல் நடத்தும் என எந்தவொரு கருத்துகளையும் கூறவில்லை. இருப்பினும், மத்தியக் கிழக்கில் இப்போது பதற்றம் நிலவும் சூழலில் ஈரானின் உயர்மட்டத் தலைவரின் ஆலோசகரே இதுபோன்ற கருத்துகளைக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே அதிபர் டிரம்ப் இதற்குப் பதிலளித்தார்.

கூலாக டிரம்ப் சொன்ன பதில்

இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "ஆமாம், அது ஒரு அச்சுறுத்தல் என்று நான் நினைக்கிறேன். அது உண்மையில் ஒரு அச்சுறுத்தலா என்று எனக்குத் தெரியவில்லை.. ஆனால் ஒருவேளை அது அச்சுறுத்தலாக இருக்கலாம்" என்று வழக்கம் போலத் தனது ஸ்டைலில் குழப்பமான பதிலை அளித்தார். மேலும் அவர் தான் சூரிய குளியல் எல்லாம் எடுக்க மாட்டேன் என்றும் அதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

சமீபத்தில் தான் அதிபர் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசியிருந்தார். அந்தச் சந்திப்பு நடந்த உடனேயே லாரிஜானி இதுபோன்ற கொலை மிரட்டலை விடுத்துள்ளார்.

ஈரான் விவகாரம்- பின்னணி

ஈரான் அணு உள்கட்டமைப்பின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.. கடந்த ஜூன் 22ம் தேதி ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய இடங்களில் உள்ள மூன்று ஈரான் அணு உலைகளை அமெரிக்கா குண்டு வீசி அழித்தன. இது அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய பி-2 குண்டுவீச்சு நடவடிக்கையாகும் இந்தத் தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+