வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை பலப்பரீட்சை.. டொனால்ட் டிரம்பை காட்டிலும் 10 புள்ளிகள் முன்னணியில் ஜோ பிடன்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை காட்டிலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் 10 சதவீதம் முன்னணியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன், தற்போதைய அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை காட்டிலும் 10 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார் என கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.

Joe Biden leads Donald Trump by 10 percentage

என்பிசி நியூஸ், வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில் தேசிய பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடையே டிரம்பிற்கு 42 சதவீதம் ஆதரவும், ஜோ பிடனுக்கு 52 சதவீத ஆதரவும் உள்ளது.

அரிசோனா, புளோரிடா, ஜார்ஜியா, மிக்சிகன், மினசோட்டா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா உள்ளிட்ட 12 ஒருங்கிணைந்த மாகாணங்கள் பிடன் 51 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை முன்னிலை வகிப்பதாக முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

அங்கேயுமா? பாதியிலேயே வெற்றி பெற்றதாக அறிவிக்க டிரம்ப் திட்டமாம்.. எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள் அங்கேயுமா? பாதியிலேயே வெற்றி பெற்றதாக அறிவிக்க டிரம்ப் திட்டமாம்.. எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்

அக்டோபர் 29 முதல் 31 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 57 சதவீத வாக்காளர்கள் டிரம்ப் கொரோனா தொற்றை கையாண்டது தவறு என கூறியுள்ளார்கள். அதுபோல் 55 சதவீத பேர் டிரம்பின் நிர்வாகத்தை அங்கீகரிக்கிறார்கள்.

அமெரிக்க தேர்தலில் இதுவரை 9.3 கோடி பேர் முன் கூட்டியே வாக்களித்துள்ளார்கள். இது 2016-ஆம் ஆண்டு தேர்தலில் எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் 67 சதவீதமாகும்.

English summary
Joe Biden leads Donald Trump by 10 percentage in US President election 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X