சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கிளுகிளுப்பு.. பெண் வழக்கறிஞருடன் டேட்டிங் செய்த ஜானி டெப்?.. பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 'பைரட்ஸ் ஆப் தி கரிபியன்' படங்களின் மூலம் உலகெங்கும் ரசிகர்களை பெற்ற ஜானி டெப், பெண் வழக்கறிஞருடன் டேட்டிங் செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஜானி டெப் என்று சொன்னால் எத்தனை பேருக்கு தெரிகிறதோ இல்லையோ, ஜாக் ஸ்பாரோ என்று சொன்னால் அறியாத சினிமா விரும்பிகளே இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு 'பைரட்ஸ் ஆப் தி கரிபியன்' படங்களின் மூலம் உலகெங்கும் ரசிகர்களை பெற்றவர் ஜானி டெப்.

பத்திரிகையில் கட்டுரை

பத்திரிகையில் கட்டுரை

இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தன்னைவிட 25 வயது குறைவான ஆம்பர் ஹேர்ட் என்ற அமெரிக்க நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 15 மாதங்களில் முடிவுக்கு வந்தது. பரஸ்பரம் விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த 2018-ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் கட்டுரை ஒன்றை எழுதினார். அந்த கட்டுரையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய பல விஷயங்கள் ஹாலிவுட் திரையுலகை அதிரவைத்தது.

நண்பர்களுக்கு விருந்து

நண்பர்களுக்கு விருந்து

ஜானி டெப் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பல கொடுமைகளை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். வெர்ஜினியா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் ஆம்பர் ஹெர்ட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த வெற்றியை தனது நண்பர்களுக்கு விருந்து வைத்து ஜானி டெப் கொண்டாடி இருந்தார்.

பெண் வழக்கறிஞருடன் டேட்டிங்

பெண் வழக்கறிஞருடன் டேட்டிங்

அவதூறு வழக்கில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஜானி டெப் வழக்கறிஞர் ஒருவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பிரபல நாளிதழான சன் பத்திரிக்கைக்கு எதிராக ஜானி டெப் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் தனக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞரான ஜோயல்லே ரிச் என்பவருடன் தான் டேட்டிங்கில் உள்ளாராம். இத்தனைக்கும் ஜோயல்லே ரிச் ஏற்கனவே திருமணமானவராம். ஆனாலும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி விட்டு தனியாக வசித்து வருகிறார்.

முன்னாள் மனைவி

முன்னாள் மனைவி

ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட்டுக்கு எதிரான அவதூறு வழக்கில் ஜோயல்லே ரிச் ஆஜராகவில்லை. ஆனாலும் ஜானி டெப்பிற்கு ஆதரவாக, வழக்கு விசாரணையின் போது தவறாமல் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார். ஜானி டெப் மற்றும் ஜோயல்லே ரிச் இருவரும் பழகிய துவக்கத்தில் ரகசியமாக ஓட்டலுக்கு சென்று வந்திருப்பதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

 டேட்டிங்கில் ஈடுபட்டதாக

டேட்டிங்கில் ஈடுபட்டதாக

ஆம்பர் ஹெர்ட்-க்கு எதிராக ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கு ஆறு வாரங்கள் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது ஜானி டெப்புக்கு ஆதரவாக கேமில் வாஸ்குவேஸ் ஆஜாராகினார். அவதூறு வழக்கில் ஜான்னி டெப் வெற்றி பெற்ற இவரது வாதம் மிக முக்கியமானது என்று சொல்லப்பட்டது. இதற்கு மத்தியில் ஜானி டெப் - கேமில் வாஸ்குவேஸ் இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டதாக வதந்திகள் பரவின.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

ஆனால், தங்களுக்குள் அதுபோன்ற எந்த உறவும் இல்லை என்று கேமில் வாஸ்குவோஸ் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த சூழலில் தான் ஜானி டெப் - ஜோயல்லே ரிச் என்ற வழக்கறிஞருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+