வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மசாலா தோசை சுட்ட கமலா ஹாரீஸ்.. பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்.. வைரலாகும் பழைய வீடியோ

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரீஸ் ஒரு டிவி நிகழ்ச்சியில் மசாலா தோசை வார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பழைய வீடியோ என்ற போதிலும் இப்போது இதை டிரென்டாக்கி வருகிறார்கள்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிபராக ஜோபிடன் வெற்றி பெற்றால் இப்பதவிக்கு வரும் முதல் அமெரிக்க ஆப்பிரிக்கர் என்ற பெருமையையும் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையையும் ஒருசேர பெறுவார் கமலா.

இவருக்கு அமெரிக்காவில் உள்ள வெள்ளையர்களும் கருப்பர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அதுபோல் கமலா தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் இங்கு அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

அசத்திட்டாரே.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த ஜோ பிடன்.. கமலா ஹாரீஷும் வாழ்த்து அசத்திட்டாரே.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த ஜோ பிடன்.. கமலா ஹாரீஷும் வாழ்த்து

தனித்துவம்

தனித்துவம்

இந்த நிலையில் அவரது பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சுமார் 57 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அவர் கூறுகையில் எனது தாத்தா, பாட்டி தனித்துவமானவர்கள். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு செல்வோம். எனது தாத்தா சுதந்திரத்திற்காக போராடியவர்.

விதைப்பு

விதைப்பு

நான் சிறுமியாக இருந்த போது நான்தான் என் தாத்தா பாட்டிக்கு மூத்த பேத்தி. நான் தினமும் எனது தாத்தாவுடன் காலையில் நடைப்பயிற்சி செல்வேன். பெசன்ட் நகர் கடற்கரையில் நாங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது என் மனதில் ஏதோ விதைக்கப்பட்டது. என் தாத்தாவுடைய நண்பர்களும் மிகப் பெரிய தலைவர்கள். அவர்கள் ஜனநாயகத்திற்கான போராட்டம் குறித்து மக்களின் உரிமை போராட்டம் குறித்தும் நிறைய பேசுவார்கள்.

எந்த சூழல்

எந்த சூழல்

எந்த சூழலில் பிறந்தாலும் அனைவரும் ஒன்றாகவே மதிக்கப்பட வேண்டும் என அந்த வீடியோவில் கமலா கூறியிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா கடந்த ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தமிழ் தொகுப்பாளினியுடன் இணைந்து மசால் தோசை செய்து சென்னையுடனான தனது நினைவுகளை பகிர்ந்தார்.

தாத்தா

தாத்தா

அந்த வீடியோவில் அவர்கள் பேசுகையில் வணக்கம் எப்படி இருக்கிறீர்கள். உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனது தாத்தா பெசன்ட் நகரில் வசித்து வந்தார் என அந்த வீடியோவில் கூறிய கமலா தனது மலரும் நினைவுகளை கூறியுள்ளார்.

English summary
US Vice presidential candidate Kamala Harris walked along with her grandfather in Chennai Besant Nagar goes viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X