"கர்நாடகாவின் மருமகன்".. அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராக தேர்வான அப்துலின் மனைவி யார் தெரியுமா? பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் முதல் முறையாக செனட் சபைக்கு இஸ்லாமியரான அப்துல் எல் சையத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எகிப்தை பூர்வீமாக கொண்ட இவரது மனைவி கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. அவரது மனைவி யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியடைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபை, செனட் சபை என்ற 2 சபைகளிலும் டிரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.
இதனால் டிரம்பின் அடுத்த 2 ஆண்டு அதிபர் பதவிக்காலம் மிகவும் சவாலாக இருக்கும். பிற நாடுகள் மீதான தாக்குதல், சட்டத்திருத்தம், அரசு சார்ந்த நியமனங்களை சுதந்திரமாக டிரம்பால் மேற்கொள்ள முடியாமல் போகலாம்.
இந்நிலையில் தான் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்த முறை செனட் சபைக்கு இஸ்லாமியர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் அப்துல் எல் சையத். வயது 43. இவர் மிக்சிகன் செனட் இடத்துக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய இவர் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மைக் ரோஜரை வீழ்த்தி வாகை சூடியுள்ளார். வெற்றி பெற்றுள்ள அப்துல் எல் சையத் எகிப்தை சேர்ந்தவர்.
அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டர் என்பதால் அவரது பின்னணி பற்றி பலரும் தேடி படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அப்துல் எல் சையத்தின் மனைவி சாரா ஜுகாகு கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் தான் தான் சாராவிற்கு சொந்த ஊராகும்.
சாராவின் தாத்தா பெயர் ஜுகாகு ஷம்சுதீன். இவர் மைசூர் முதல்வராக இருந்த பிடி ஜெட்டியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தார். தந்தை பெயர் ஜுகாரு எஸ் தையிப். இவர் பட்கலில் பிறந்து வளர்ந்தார். இவர் பெங்களூர் மெடிக்கல் கல்லூரியில் டாக்டர் பதவியை முடித்தார். அதன்பிறகு மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். மிக்சிகன் நகரில் குடியேறினார். சாரா ஜுகாகு அமெரிக்காவிலேயே பிறந்து மருத்துவ படிப்பை முடித்தார்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வாஜிலோஸ் கல்லூரியில் பிசிசியன்ஸ் மற்றும் சர்ஜன்ஸ் படிப்பை முடித்தார். அதன்பிறகு மிக்சிகன் சுகாதார பல்லைக்கழத்தில் பணியாற்றினார். மிக்சிகன் பல்லைக்கழகத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தான் சாரா ஜுகாகு மற்றும் அப்துல் எல் சையத் பார்த்து கொண்டவனர். அதன்பிறகு 2006ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 8 வயதில் எம்மாலி என்ற மகளும், 3 வயதில் சிரெனி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
