"ஸ்கூல் குழந்தைகள் அடிச்சுக்கிற மாதிரி!" உலகமே பதறும் இஸ்ரேல்- ஈரான் மோதல்.. டிரம்ப் தக் லைஃப் பதில்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் இப்போது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. உலக நாடுகளே எங்கு இந்த இஸ்ரேல் ஈரான் மோதல் அடுத்த உலகப் போரின் தொடக்கமாக அமைந்துவிடுமோ என்று அஞ்சி வருகிறார்கள். ஆனால், இது குறித்துக் கேட்ட போது முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

israel iran war iran israel

டிரம்ப் ஷாக்: இது எங்கு உலகப் போரின் தொடக்கமாக இருந்து விடுமோ என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த மோதலை பள்ளியில் சண்டையிடும் இரண்டு குழந்தைகளின் மோதலை போன்றது என்று ஷாக் பதிலை அளித்தார்.

இது தொடர்பான கேள்விக்கு டிரம்ப் மேலும் கூறுகையில், "இது கொஞ்சம் மோசமாகத் தான் இருக்கிறது. ஆனால், சில பிராசஸ்களை முடிக்க வேண்டும். இந்த மோதல் பள்ளியில் இரண்டு குழந்தைகள் சண்டையிடுவதைப் போல.. சில சமயம் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க அமைதியாக விட்டுவிட வேண்டும். இதிலும் நாம் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்" என்று பதிலளித்தார்.

டிரம்ப் சொன்ன பதில்: தொடர்ந்து பேசிய டிரம்ப், "ஆனால் இது ஒரு பயங்கரமான போர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இன்றும் கூட அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இது எங்குச் சென்று நிற்கப் போகிறது என்றே தெரியவில்லை. இன்று அவர்கள் கிட்டத்தட்ட 200 ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். எந்தவொரு நாட்டிற்கும் இப்படியொரு நிலை வரக் கூடாது. மத்திய கிழக்கில் நிச்சயம் நாங்கள் கவனம் செலுத்துவோம். இப்படியொரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது" என்றார்.

இவ்வளவு நடந்தும் இஸ்ரேலை விட்டு தராத அமெரிக்கா.. உண்மையில் என்ன காரணம்! அதிர வைக்கும் பின்னணி


இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் கிட்டத்தட்ட 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. இருப்பினும், இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்துவிட்டது. இதற்கு அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் உதவியது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்: இந்த தாக்குதல் குறித்த செய்தி வந்த உடனே அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் செயலற்று இருப்பதாலேயே இந்த தாக்குதல் நடந்ததாக விமர்சித்தார். மேலும், உலகம் இப்போது மிகப் பெரிய பேரழிவுக்கு மிக அருகில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஈரானிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா? இஸ்ரேலை சூழும் மிக பெரிய ஆபத்து! உலக நாடுகள் பதறுவது ஏன்


இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "மூன்றாம் உலகப் போர் குறித்து நான் நீண்ட காலமாக எச்சரித்து வருகிறேன். நான் இது குறித்து எந்தவொரு கணிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் எனது கணிப்புகள் அப்படியே நடந்துவிடும். ஆனால், ஒன்று உலகம் இப்போது மிகப் பெரிய பேரழிவுக்கு மிக அருகில் உள்ளது.

நடவடிக்கை இல்லை: இப்படியொரு சர்வதேச குழப்பம் ஏற்பட்டு போது அதிபர் பைடனும் துணை அதிபர் கமலா ஹாரிஸும் தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்று கூட தெரியாத சூழலே இருக்கிறது.

நான் அதிபராக இருந்த போது மத்திய கிழக்கில் பதற்றம் இல்லை. ஈரான் எனது வழிக்குக் கொண்டு வந்து இருந்தேன். பொருளாதாரத் தடைகளால் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. எப்படியாவது ஒரு டீல் போட முயன்றனர். ஆனால், கமலா ஹாரிஸ் அவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கினார். இதனால் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை அவர்கள் தொடங்கிவிட்டனர்.

போரின் விளிம்பில் உள்ளோம்: நான் ஆட்சியில் இருந்த வரை மத்திய கிழக்கு, ஐரோப்பாவில் போர் இல்லை. ஆப்கானிஸ்தானில் பேரழிவு இல்லை. ஆசியாவில் நல்லிணக்கம் இருந்தது. இந்த நாட்டை திறமையற்ற சிலர் ஆட்சி செய்வதாலேயே இப்போது நாம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் இருக்கிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+