• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மக்களே உஷார்.. கொரோனாவுக்கு பயந்து மலேரியா மருந்தை உட்கொண்டவர் பலி.. மனைவி சீரியஸ்

|

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்த மலேரியா மருந்து பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த குழுவும், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine) என்ற பெயரிலான மலேரியா மருந்தை உட்கொள்ளலாம் என பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், இது நோயாளிகளுக்கும், சீரியசான நிலையில் உள்ளவர்களுக்கும் மட்டுமேதான். இது புரியாமல், நோயே தாக்காமல் ஒரு தம்பதி, இந்த மாதிரி ஒரு மாத்திரையை வாங்கி சாப்பிட்டதால், பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.

அமெரிக்காவின், அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார், அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் சாப்பிட்டது, மலேரியா எதிர்ப்பு மருந்தின் அதே மாதிரி மூலப்பொருளைக் கொண்ட மருந்து ஆகும்.

மின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது.. மதுரையில் கொரோனா நோயாளி கவலைக்கிடம்.. விஜய பாஸ்கர் தகவல்

ட்ரம்ப் கருத்து

ட்ரம்ப் கருத்து

கோரோவிட் வைரஸ் தொற்றுநோயைப் பற்றிய வெள்ளை மாளிகையின் ஆலோசனைக் கூட்டத்தின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோரோவிட் வைரஸ் தொற்றுநோய் சிகிச்சையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் முக்கிய பங்காற்றும் என்று கூறியிருந்தார்.

கூகுளில் தேடி

கூகுளில் தேடி

இதை பார்த்து, கூகுளில் தேடி சொந்தமாக மருந்து சாப்பிட்ட இந்த தம்பதிகளுக்கு குமட்டல் மற்றும் வாந்தி பக்க விளைவுகள் ஏற்பட்டது.

அந்த நபர் இருதயக் கோளாறால் இறந்தார், அவரது மனைவி ஆபத்தான நிலையில் சிசிச்சை பெறுகிறார், என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பெண் முழுமையாக குணமடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், வந்துவிட கூடாது என நினைத்து, இந்த வகை மாத்திரையை அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

பேனர் மருத்துவமனை, மருத்துவ இயக்குனர் டாக்டர் டேனியல் புரூக்ஸ், ஒரு நேர்காணலில், இந்த தம்பதியினர் சுய மருந்து முயற், ஒரு எச்சரிக்கை சம்பவம் என்று கூறினார். "மக்கள் இதைச் செய்வது நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தானது மற்றும் முட்டாள்தனம்" என்று அவர் கூறினார்.

அரசியல்வாதிகள் சொல்வதை கேட்காதீர்கள்

அரசியல்வாதிகள் சொல்வதை கேட்காதீர்கள்

மருத்துவ ஆலோசனைக்காக , இணையம் அல்லது அரசியல்வாதிகளை அல்ல.. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், உலக சுகாதார அமைப்பு மற்றும் மாநில சுகாதார அதிகாரிகள் போன்ற அதிகாரப்பூர்வ நபர்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றார் டேனியல். மேலே குறிப்பிட்ட மலேரியா மருந்து, இதயத்தை பாதிப்படையச் செய்யும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பல மருத்துவர்களும் எச்சரிக்கிறார்கள்.

 
 
 
English summary
A man died and his wife was hospitalized after officials said they treated themselves Sunday with a deadly home remedy for the new coronavirus.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X