என்னையும் போட்டோ எடுங்க..புதுமண தம்பதியின் போட்டோஷூட்டில் குட்டி சேட்டை செய்த குரங்கு..க்யூட் வீடியோ
வாஷிங்டன்: திருமண போட்டோ ஷூட் நடத்தி கொண்டு இருந்த போது அழையா விருந்தாளியாக வந்த குரங்கு ஒன்று போட்டோ ஷூட்டில் புகுந்து குட்டிச் சேட்டை செய்ததோடு மணமகன் மீது ஏறி அமர்ந்து அட்டகாசம் செய்தது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத தருணம் ஆகும். இந்த திருமண நிகழ்ச்சியை புகைப்படங்களாகவும் வீடியோ பதிவுகளும் பாதுகாப்பாக வைத்திருந்து உறவினர்களுக்கு எல்லாம் காட்டி தம்பதிகள் மகிழ்வதுண்டு.
ஏன் தங்கள் பேரக்குழந்தைகளிடம் கூட காட்டுவதற்காக அதை பத்திரப்படுத்தி வைத்துகொள்கின்றனர்.

வெட்டிங் போட்டோஷூட்
திருமணம் என்ற அந்த மறக்க முடியாத தருணத்தை தற்போது வெட்டிங் போட்டோஷூட், ப்ரி வெட்டிங் போட்டோஷூட் என இப்போதுள்ள தம்பதிகள் எடுத்து வைத்துக்கொள்கின்றனர். இதுபோன்ற போட்டோஷூட்கள் பலவும் அவுட்டோர்களில் நடப்பதால் சுவாரசியமான சில சம்பவங்களும் அடிக்கடி நடந்து தம்பதிகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு அமைந்து விடுகிறது.

ரசிக்க வைத்த சம்பவம்
அண்மையில் கூட கேரளாவில் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டு இருந்த போது யானை ஒன்று தென்னை ஓலையை வீசி விரட்டியடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சி கலந்த ரசனையை கொடுக்கும் வகையில் இருந்தது. தற்போது அதேபோன்றதொரு சம்பவம் இணையத்தில் பரவி பலரையும் ரசிக்க வைத்துள்ளது. இயற்கையான பகுதிகளில் போட்டோஷூட் எடுக்கவே தம்பதிகள் பலரும் விரும்புவார்கள்.

நானும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன்
அந்தவகையில் சுற்றிலும் இயற்கை சூழல் அமைந்துள்ள ஒரு பூங்காவில் போட்டோஷூட் எடுக்க ஒரு புதுமண தம்பதி முடிவு செய்து அதற்காக பூங்கா ஒன்றிற்கு சென்று போட்டோ எடுக்க தயராகினர். இந்த தம்பதிகள் போட்டோ எடுத்ததை கவனித்துக் கொண்டு இருந்த குரங்கு ஒன்று நானும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வார்றேன் என்ற தொனியில் தம்பதியை நெருங்கியது. இதனால் சற்று பதறிய மணப்பெண் சற்று தள்ளிப்போக மணமகன் சளைக்காமல் நின்றார்.

இணையத்தில் பரவும் வீடியோ
குரங்கும் தனது குட்டியை முதுகில் சுமந்தபடி மணமகன் மேல் ஏறி மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் இந்த சேட்டையை செய்த குரங்கு அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறது. அதன்பின்னர் போட்டோஷூட் வழக்கம் போல தொடகிறது. இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. லட்சக்கணக்கான லைக்குகளை வாரி குவித்துள்ளது. குரங்கு செய்த செல்ல சேட்டையை ரசித்த நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சிறப்பு மிக்க தருணம்
குரங்கு வந்தாலும் எந்த சலனமும் காட்டாமல் போட்டோஷூட் நடத்துகிறார்களே என்று சில நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதேபோல், சில நெட்டிசன்கள், எந்த ஒரு வீடியோ கிராபருக்கும் இது ஒரு கனவும் தருணம் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் வீடியோ நிறுவனமும், குரங்கு குட்டியுடன் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டது சிறப்பு மிக்க தருணம் என்று பதிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications