வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனது முதல் குழந்தை என் கைகளிலேயே இறந்து போனது.. எலான் மஸ்க் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: என்னுடைய முதல் மகன் பிறந்த 10 வாரங்களிலேயே எனது கைகளிலேயே உயிரை இழந்து விட்டதாகவும் அவனது இதய துடிப்பை உணர்ந்தேன் என்றும் எலான் மஸ்க் உருக்கமாக ட்விட் பதிவிட்டு இருக்கிறார்.

பிரபல முன்னணி சமூக வலைத்தள நிறுவமான ட்விட்டரை கடந்த மாதம் 44 பில்லியன் டாலர் ( சுமார் 3.5 லட்சம் கோடி) கொடுத்து எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.

ட்விட்டரை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடிகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.

கம்பேக் கொடுத்த டிரம்ப்! காரணமே இந்த எலான் மஸ்க் தான்! ட்விட்டரில் காத்திருக்கும் பெரிய சம்பவம்கம்பேக் கொடுத்த டிரம்ப்! காரணமே இந்த எலான் மஸ்க் தான்! ட்விட்டரில் காத்திருக்கும் பெரிய சம்பவம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

அந்த வகையில் ட்விட்டரில் கருத்து/ பேச்சு சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் புளு டிக் வசதியும் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிப்புகளையும் வெளியிட்டார். புளு டிக் வசதி பெறுவதற்கு கட்டணமும் அறிவித்து இருந்தார். எனினும், போலி கணக்குகள் பிரச்சினை உருவெடுத்ததால் புளு சப்ஸ்கிரிப்ஷன் வசதி தற்காலிமகாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

பல்வேறு நடவடிக்கைகள்

பல்வேறு நடவடிக்கைகள்

மீண்டும் வரும் 29 ஆம் தேதி கட்டணம் செலுத்தி புளு டிக் வசதி பெறும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்து விட்டார். ட்விட்டர் நிர்வாகத்தில் ஆட் குறைப்பு, பணியாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் எலான் மஸ்க்.. ட்விட்டரில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட கணக்குகளை மீண்டும் கொண்டு வருவது பற்றியும் பேசி வருகிறார்.

டிரம்ப் கணக்கை அனுமதிக்க

டிரம்ப் கணக்கை அனுமதிக்க

அந்த வகையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கை மீண்டும் அனுமதிக்கலாமா? என்று ட்விட்டரில் எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். எலான் மஸ்க்கின் இந்த வாக்கெடுப்பிற்கு பெரும்பாலானோர் டிரம்ப் கணக்கை அனுமதிக்க வேண்டும் என்று ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, டிரம் கணக்கை மீண்டும் ட்விட்டரில் எலான் மஸ்க் அனுமதித்தார்.

என்னுடைய கைகளிலேயே இறந்து போனதாக

என்னுடைய கைகளிலேயே இறந்து போனதாக

இதனிடையே, நெட்டிசன் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவரை மீண்டும் ட்விட்டரில் அனுமதிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க்... குழந்தையின் மரணத்தை தங்கள் புகழுக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் பயன்படுத்துவர்கள் மீது நான் ஒருபோதும் இரக்கம் காட்ட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும், தன்னுடைய முதல் குழந்தை 10 வாரங்களில் என்னுடைய கைகளிலேயே இறந்து போய் விட்டதாகவும் அவனது இதய துடிப்பை தன்னால் உணர முடிந்ததாகவும் உருக்கமாக எலான் மஸ்க் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 2002-ல் முதல் குழந்தை

2002-ல் முதல் குழந்தை

உலக பெரும் பணக்காராக இருக்கும் எலான் மஸ்க் கடந்த 2000 ஆம் ஆண்டில் வில்சன் என்பவரை திருமணம் செய்து இருந்தார். இந்த தம்பதிக்கு 2002 ஆம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. எனினும், நிவாண்டா அலெக்ஸாண்டர் என்ற அந்த குழந்தை திடீரென இறந்து போனது. இந்த சம்பத்தை குறிப்பிட்டே எலான் மஸ்க் தற்போது குழந்தையின் மரணத்தை வைத்து லாபம் தேடுபவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டேன் என்று ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

பிறந்து 10 வாரமே ஆன

பிறந்து 10 வாரமே ஆன

எலான் மஸ்க் இது குறித்து ஏற்கனவே ஒருமுறை பொதுவெளியில் பகிர்ந்து இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் மகன் இறந்த போது ஆறுதல் தெரிவித்து இமெயில் அனுப்பிய எலான் மஸ்க், குழந்தை இறப்பதை விட மோசமான எதுவும் இல்லை. பிறந்து 10 வாரமே ஆன எனது மகனை இழந்தேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பான தகவல்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியில் தெரியவந்தது.

English summary
My first son died in my arms 10 weeks after his birth, Elon Musk tweeted that he felt his heartbeat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X