நிலவில் சொந்தமாக ஒரு கிராமம்.! அமெரிக்கா போடும் பிரம்மாண்ட திட்டம்! இனி இதுதான் எதிர்காலம்
வாஷிங்டன்: சமீப காலமாகவே அமெரிக்காவில் நிலவு குறித்த ஆய்வுகள் மீண்டும் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நாசா இது குறித்த ஆய்வுகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு நிரந்தரக் கிராமத்தையே அமைக்கப் போவதாக நாசா கூறியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பூமியின் ஒரே துணைக்கோளாக நிலா இருப்பது அனைவருக்கும் தெரியும். கடந்த நூற்றாண்டில் நிலா குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டி போட்டுக் கொண்டு ஆய்வுகளை நடத்தின. அதன் பிறகு நிலா குறித்த ஆய்வுகளை இரு நாடுகளுமே விட்டுவிட்டன. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் நிலா குறித்த ஆய்வுகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது.

நாசா
இதற்கிடையே நிலா ஆய்வு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா மிக முக்கியமான ஒரு தகவலைக் கூறியுள்ளது. அதாவது அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு நிரந்தரக் கிராமத்தை உருவாக்கும் திட்டம் இருப்பதாக நாசா கூறியுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில் நாசா நிர்வாகி சீன் டஃபி இந்த அறிவிப்பை வெளியிட்டார். நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அணுசக்தி பவர் மூலம் இயங்கும் கிராமத்தை உருவாக்குவதே நாசாவின் நீண்டகாலத் திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
நிலவில் கிராமம்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "நிலவில் நீண்ட காலம் மனிதர்கள் தங்கும் ஒரு சூழலை நாங்கள் உருவாக்குவோம். அது வெறுமன ஆய்வு மையமாக மட்டும் இருக்காது. கிட்டத்தட்ட ஒரு கிராமம் போல இருக்கும்" என்று தெரிவித்தார். இதே 10 ஆண்டுகளில் நிலவைத் தாண்டி, செவ்வாய்க் கிரகத்திற்கும் மனிதர்கள் செல்லும் சூழல் உருவாகும் என்றும் கிரகங்களுக்கு இடையேயான பயணங்களில் பெரிய முன்னேற்றங்கள் இருக்கும் என்றும் டஃபி தெரிவித்தார்.
நாசா கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோல நிலவில் அணு உலை அமைப்பது தொடர்பான ஆய்வைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.. நிலவில் வேறு எந்தவொரு மின்சார சோர்ஸும் இல்லை என்பதால் நீண்ட காலம் தங்க இதுபோல அணு உலை அமைப்பது அவசியமாகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் சந்திரனில் அணு உலை அமைக்கத் தனியார் நிறுவனங்களின் ஆதரவை நாசா கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சந்திரன் குறித்த ஆய்வு
நிலவுக்கு முதலில் மனிதர்களை அனுப்பியது நாசா தான். தனது அப்பல்லோ ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி இருந்தது. ஆனால், அதன் பிறகு சுமார் 50 ஆண்டுகளாக நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா பெரியளவில் ஆர்வம் காட்டாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது அமெரிக்கா ஆர்டெமிஸ்-II திட்டம் மூலம் மீண்டும் நிலவு குறித்த ஆய்வை கையில் எடுத்துள்ளது.
நிலவில் கிராமம் அமைப்பதாகச் சொன்ன டஃபி அது குறித்து மேலும் விளக்கிப் பேசினார். நாங்கள் முழுக்க முழுக்க ஆய்வுக்காகவே நிலவில் கிராமத்தை அமைக்கப் போகிறோம். யாருடைய நிலத்தையும் கைப்பற்றப் போவதில்லை. அமைதியான ஆய்வே எங்கள் நோக்கம்" என்று அவர் ரஷ்யாவைச் சீண்டும் வகையில் பேசியிருந்தார். உக்ரைன் போர் காரணமாக இந்த ஆண்டு சர்வதேச விண்வெளி மாநாட்டில் ரஷ்யா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சொல்வது என்ன
அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு ஆய்வாளர்களும் தங்கள் நாட்டின் விண்வெளி திட்டம் தொடர்பாக முக்கிய விளக்கங்களைக் கொடுத்தனர். அதன்படி இந்த மாநாட்டில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், உணவு மற்றும் நீர் பாதுகாப்பை உறுதி செய்வதே இஸ்ரோவின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், லூபெக்ஸ் (LUPEX) என்ற இந்தியா- ஜப்பான் கூட்டுத் திட்டத்தையும் அவர் விளக்கினார். இந்தத் திட்டத்தின் கீழ், ஜப்பானிய H3 ராக்கெட் மூலம் 6,800 கிலோ எடையுள்ள லேண்டர் மற்றும் 300 கிலோ எடையுள்ள ரோவர் நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இது முந்தைய சந்திரயான் திட்டங்களை விட பல மடங்கு பெரியதாகும்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications