Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

50 ஆண்டுகளுக்குப் பிறகு. . ஆம்ஸ்ட்ராங்கின் கால் தடத்தை ஜூம் செய்யும் நாசா. . என்னவா இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக நிலவு நாளையொட்டி, நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தடம் அடங்கிய வீடியோ ஒன்றை நாசா தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பூமியில் உள்ளது போல் மனிதர்கள் உயிர் வாழ தேவையான பிராணவாயு, தண்ணீர் போன்றவை இல்லாத ஓரிடம் சந்திரன்.

எனவே மனிதன் அங்கு சென்று வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றே நம்பப்பட்டு வந்தது. மிகவும் குளிர்ச்சி நிறைந்ததாகவும், அழகானதாகவும் தென்படும் நிலவுக்கு சென்ற வர வேண்டும் என கற்பனையில் கூட நினைத்திராததை விஞ்ஞானிகள் மெய்பித்து காட்டி அசத்தினர்.

 தீவிர ஆராய்ச்சி

தீவிர ஆராய்ச்சி

நிலவிற்கு மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்த அமெரிக்க அரசு அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதற்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவும் பகலும் உழைத்தனர். ஆனால் இது எளிதில் நடந்து விட வில்லை. இதற்காக அறிவியல் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினர். தொடர்ந்து கடந்த 1961-ம் ஆண்டு அமெரிக்க அரசு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டது.

 102 மணி நேர பயணம்

102 மணி நேர பயணம்

இதன் பலனாக கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி அப்பல்லோ 11 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கை கோளில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் சென்றனர். விண்ணில் செலுத்திய பிறகு 102 மணி நேரம் பயணித்த இந்த செயற்கை கோள் நிலவை சென்றடைந்தது. உலக நாடுகள் மட்டுமின்றி உலக மக்களுக்கும் இந்த வியப்பான தருணத்தை உற்று நோக்கி வந்தனர்.

 நிலவில் காலடி எடுத்து வைத்தார்

நிலவில் காலடி எடுத்து வைத்தார்

உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், விண்கலம் நிலவில் தரையிறங்கியதும், முதல் ஆளாக நீல் ஆம்ஸ்ட்ராங் தனது கால் தடத்தை நிலவில் பதித்தார். நிலவின் மீது முதல் அடி எடுத்து வைத்த இந்த தருணத்தை மனித குலமே வியந்து பார்த்தது. இதையடுத்து 8 நாட்கள் வரை நிலவில் ஆராய்ச்சி செய்து விட்டு ஜூலை 24 -ந் தேதி மீண்டும் விண்கலம் பூமி திரும்பியது. நிலவில் மனிதனின் காலடி வைத்தது விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.

நாசா பகிர்ந்த வீடியோ

இந்த நிலையில், உலக நிலவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொடி அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவுகூர்ந்து, நாசா தனது டுவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நிலவின் மேற்பரப்பு பெரிது படுத்தி காட்டப்படுகிறது. இதில் காலடித்தடம் தெளிவாக தெரிகிறது. வீடியோ பதிவுடன் நாசா வெளியிட்ட ட்விட் பதிவில், இது சர்வதேச நிலா தினம். அப்பல்லோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. மற்றொரு உலகத்தில் மனிதன் கால் தடம் பதித்தது அதுவே முதல் முறையாகும். இத்தனை காலத்திற்குப் பிறகும் நிலாவில் மனிதனின் கால்தடம் உள்ளது"என தெரிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+