வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை எடுத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.. ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாசா தயாரித்துள்ள 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் திகைத்துள்ளனர்.

Recommended Video

    James Webb Telescope எடுத்த முதல் புகைப்படங்களை வெளியிட்ட NASA | Science

    பிரபஞ்சம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் மனித குலத்தை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாம் வாழும் பூமி எப்படி தோன்றியது, அண்ட பால்வெளி வீதியில் என்ன உள்ளது என்பது பற்றி கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

     டெல்லியில் நடுங்கும் குளிர்.. 3 மாநிலங்களில் மழைக்கு 18 பேர் பலி-மும்பையில் கனமழை எச்சரிக்கை டெல்லியில் நடுங்கும் குளிர்.. 3 மாநிலங்களில் மழைக்கு 18 பேர் பலி-மும்பையில் கனமழை எச்சரிக்கை

    அந்த வகையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது.

    'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி

    'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி

    முதல்முறையாக மனிதனை நிலவுக்கு அனுப்பும் அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தை முன்னின்று நடத்தியவர் ஜேம்ஸ் வெப். அவரின் பெயர் தான் இந்த தொலைநோக்கி திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து 5 ராக்கெட்டுகள் உதவியுடன் இந்த 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    ஜோ பைடன் வெளியிட்டார்

    ஜோ பைடன் வெளியிட்டார்

    பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த அல்லது இருப்பதற்குச் சாத்தியமான வேறு கோள்கள் இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் வரை எப்படி உருவாகின போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும் என்று நாசா தெரிவித்தது.

    இந்த நிலையில், 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி இதுவரை யாரும் பார்க்காத பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை வெளியிட்டார். பிரபஞ்சத்தை மிகச்சிறந்த முறையில் மிகச்சிறந்த ரெசல்யூஷனில் பிடிக்கப்பட்ட படம் இதுவே என நாசா தெரிவித்துள்ளது.

    புதிய கண்டுபிடிப்பாகவே உள்ளது

    புதிய கண்டுபிடிப்பாகவே உள்ளது

    ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்த விண்வெளி பேரண்டத்தின் புதிய படங்களை நாசா அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு புகைப்படமும் ஒரு புதிய கண்டுபிடிப்பாகவே உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. நாசா வெளியிட்டு வரும் இந்த புகைப்படங்கள் இணைய உலகத்தையும் வியக்க வைத்துள்ளன.

     கவலைகள் கரைந்து விடுகிறது

    கவலைகள் கரைந்து விடுகிறது

    பிரபஞ்சத்தின் இந்த அளவிட முடியாத ஆழமான வெளிச்சத்தில், தங்கள் கவலைகளும் பிரச்சினைகளும் கரைந்து விடுவதாக சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
    மேலும், சில டுவிட்டர் பயனர்கள் பிரபஞ்சத்தின் இந்த ஆழமற்ற பார்வையின் வெளிச்சத்தில் தங்கள் கவலைகள் கலைந்து போவதாக உணர்ந்ததாகக் கூறினார்கள். மேலும், தங்களுக்கு உள்ளேயே ஆழ்ந்த கேள்வி எழுப்பும் தருணமாக இருப்பதாக கேலியாக குறிப்பிட்டுள்ளனர்.

    English summary
    NASA’s James Webb Space Telescope released a new wave of space photos, The Internet was in awe of the photos, and while some Twitter users said they felt their worries dissipate in light of this fathomless view of the universe
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X