50,000 ஆண்டு அதிசயம்.. பிப்.,1ல் பூமி வரும் வால்நட்சத்திரம்.. வெறும் கண்களாலே பார்க்கலாம்.. அபூர்வம்
வாஷிங்டன்: சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால் நட்சத்திரங்களும் வலம் வருகின்றன. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வால்நட்சத்திரம் ஒன்று மிகவும் பிரகாசமாக பூமிக்கு அருகே வந்து செல்ல உள்ளது. 50,000 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் இந்த அதிசயத்தை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம்.
வானில் தினமும் ஏராளமான அரிய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதில் சில நிகழ்வுகளை நாம் கண்களால் பார்க்க முடியும். பல நிகழ்வுகளை நம்மால் பார்க்க முடியாத சூழல் உள்ளது.
இதற்கிடையே வானியல் நிகழ்வுகள் சார்ந்த ஆராய்ச்சிகள், ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மனிதர்கள் அரியாத பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வால்நட்சத்திரம் என்பது என்ன?
சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றனர். அதேபோல் தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவை பொருட்களும் சூரியனை நீள்வட்டபாதையில் சுற்றி வருகின்றன. இதனை தான் நாம் வால்நட்சத்திரம் என்கிறோம். இந்த வால்நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் என்பது வேறுபாடானதாகும். சூரியனுக்கு மிகவும் அருகே உள்ள சில வால் நட்சத்திரங்கள் ஓராண்டுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும் நிலையில் நீண்ட தொலைவில் உள்ள வால் நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாளில் ஒரேயொரு முறை மட்டுமே சூரியனை வலம் வரும். அதிகபட்சமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி விட்டு செல்லும் என கூறப்படுகிறது.

பிப்ரவரி 1ல் பூமிக்கு வரும் வால்நட்சத்திரம்
இவ்வாறு நீள்வட்டபாதையில் சுற்றி வரும் வால் நட்சத்திரங்கள் அவ்வப்போது பூமிக்கு அருகே வந்து செல்வது உண்டு. அந்த வகையில் தான் தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய வால் நட்சத்திரம் ஒன்று பிப்ரவரி மாதம் 1ம் தேதி பூமிக்கு அருகே கடந்து செல்ல உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் பற்றியும், இதனை மனிதர்களால் பார்க்க முடியுமா? இல்லையா? என்பது பற்றியும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

வால்நட்சத்திரம் பெயர் என்ன?
வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் சி/2022 இ3(இசட்.டி.எப்) என்ற வால் நட்சத்திரம் சுற்றி வருகிறது. இந்த வால் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் 2022ல் மார்ச் 2ல் கண்டுப்பிடித்தனர். ஸ்விக்கி ட்ரான்சியன்ட் பெசிலிட்டி வைட்பீல்ட் சர்வே கேமரா மூலம் இந்த வால்நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இது சிறுகோள் என நம்பப்பட்டது. ஆனால் தொடர் ஆய்வின் மூலம் இது வால்நட்சத்திரம் என உறுதி செய்யப்பட்டது. இந்த வால்நட்சத்திரம் தான் தற்போது பூமியின் அருகே வந்து செல்ல உள்ளது. இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி மாதம் 1ம் தேதி பூமிக்கு அருகே அதாவது 4.2 கோடி கிலோமீட்டர் தூரத்தில் கடந்து செல்ல உள்ளது.

வெறும் கண்களால் பார்க்கலமா?
இந்த வால்நட்சத்திரத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் கூட பார்க்கலாம். இருப்பினும் கூட அன்றைய தினம் சூரியன் மறைந்த பிறகு மிகவும் இருட்டாக இருந்தால் மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கு முன்பு கடந்த 2020ல் பூமிக்கு அருகே ‛நியோவைஸ்' வால் நட்சத்திரம் வந்தது. அதற்கு பிறகு தற்போது தான் வெறும் கண்களால் பார்க்கக்கூடிய வால்நட்சத்திரம் பூமிக்கு அருகே வர உள்ளது.

பூமிக்கு பாதிப்பா?
முன்னதாக இந்த வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகே கடந்து செல்ல உள்ளது. அதன்படி ஜனவரி 12ல் இந்த வால்நட்சத்திரம் சூரியனிடம் இருந்து 16.6 கோடி கிலோமீட்டர் தூரத்தில் கடந்து செல்ல உள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வால்நட்சத்திரம் பிப்ரவரி ஒன்றாம் தேதி பூமிக்கு அருகே வந்து செல்வதன் மூலம் பூமிக்கு எந்தபாதிப்பும் இல்லை. மேலும் இந்த நிகழ்வுக்கு பிறகு அடுத்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த வால் நட்சத்திரம் மீண்டும் தெரியும்.

முன்பு நடந்தது என்ன?
முன்னதாக இதற்கு முன்பு 1997 ஏப்ரல் 1ல் பூமிக்கு அருகே ‛ஹாலே-பாப்' வால்நட்சத்திரம் கடந்து சென்றது. இது மிகவும் பிரகாசமாக இருந்தது. தொடர்ந்து 540 நாட்கள் பூமியில் இருந்து பார்க்க முடிந்தது. இதனால் 20ம் நூற்றாண்டின் பிரகாசமான நட்சத்திரமாக இது பெயர் எடுத்துள்ளது. அதற்கு முன்பு என்றால் கடந்த 1811ல் ‛கிரேட் காமட்' வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே வந்தது. இதனை 260 நாட்கள் பார்க்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications