‛அணு ஆயுதங்கள்’.. உலகில் மிக ஆபத்தான நாடாக பாகிஸ்தான்.. அமெரிக்க அதிபர் ஜோபைடன் திடீர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ‛‛அணு ஆயுதங்கள் வைத்துள்ள பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாக உள்ளது'' எனக்கூறிய அமெரிக்க அதிபர் ஜோபைடன் அதற்கான காரணம் குறித்தும் திடீரென்று பேசி இருப்பது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற பிரசாரக்குழு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். பிற நாடுகள் உடனான அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து அதிபர் ஜோபைடன் பேசினார்.

ஜோபைடன் பேச்சு

ஜோபைடன் பேச்சு

இந்த வேளையில் அமெரிக்காவுக்கு சவாலாக உள்ள சீனா, ரஷ்யா குறித்து ஜோபைடன் பேசினார். இந்த வேளையில் நமது அண்டை நாடான பாகிஸ்தான் பற்றியும் ஜோபைடன் சில கருத்துகளை தெரிவித்தார். அப்போது உலகில் மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தான் உள்ளது என அவர் கூறினார். இதுதொடர்பாக ஜோபைடன் கூறியதாவது:

ஜோபைடன் கூறியது என்ன?

ஜோபைடன் கூறியது என்ன?

‛‛சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு என்ன வேண்டும் என்பதை புரிந்து கொண்டாலும் கூட மிகப்பெரிய பிரச்சனைகள் உள்ளன. அதை எப்படி கையாள்வது? ரஷ்யாவில் என்ன நடக்கிறது? என்பதற்கு ஒப்பீட்டளவில் நான் நினைப்பது ஒன்றுதான். எனது பார்வையில் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. எந்த வகையான ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வைத்துள்ளது'' என கருத்து தெரிவித்துள்ளார்.

 உற்று கவனிக்கும் உலக நாடுகள்

உற்று கவனிக்கும் உலக நாடுகள்

ஜோபைடனின் இந்த கருத்து தற்போது பெரும் உலக நாடுகளை உற்று கவனிக்க செய்துள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி நடந்தபோது அவர் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்தார். அதோடு இம்ரான் கான் அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையில் இருந்தது. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தபோதும் கூட பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக இம்ரான் கான் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தானுக்கு பின்னடைவு

பாகிஸ்தானுக்கு பின்னடைவு

ஆனால் தற்போது பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். ஷெபாஸ் ஷெரீப் அரசு, அமெரிக்காவுடன் நல்உறவு வைத்து கொள்ள தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் தற்போதைய சூழலில் பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பாகிஸ்தானுக்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் உதவி என்பது தேவையானதாக இருக்கும். ஏற்கனவே அதிக கடன் வாங்கியதால் சீனா பாகிஸ்தானை கைவிடும்பட்சத்தில் உக்ரைன் மீதான போர் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்ட காரணங்களால் ரஷ்யா உதவ மறுக்கலாம். இதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் ஆதரவு என்பது நிச்சயம் தேவையானதாக இருக்கும். ஆனால் அமெரிக்க அதிபர் ஜோபைடனின் இந்த பேச்சு என்பது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+