நிதி தாங்க.. இறந்த மகனின் அஸ்தியை நிலவிற்கு அனுப்பும் பெற்றோர்.. பின்னனியில் நெகிழ்ச்சி கதை!
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பெற்றோர், நிலாவுக்கு செல்ல வேண்டும் என்ற தங்கள் மகனின் ஆசையை, மகன் இறந்துவிட்டாலும் எப்படியாவது அவனது ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நிதி திரட்டி வருகின்றனர்.
மனதை கரைய வைக்கும் இந்த உருக்கமான சம்பவம் குறித்த தகவல்கள் வருமாறு;- புளோரிடா மாகாணத்தை சேர்ந்த தம்பதி கோரி மற்றும் ஸ்காட் கல்லாகர். இந்த தம்பதியின் மகன் மேத்யூ.
இவனுக்கு 5 வயதில் இருந்தே எப்படியாவது விண்வெளி வீரர் ஆகிவிட வேண்டும் என்பது கனவு. மற்ற சிறுவர்கள் போல் அல்லாமல் விளையாட்டிலும் கூட தன்னை விண்வெளி வீரர் என நினைத்துக்கொண்டு அவர்களின் அசைவுகள் படியே செய்து காட்டி குறும்புத்தனம் காட்டி வந்தான். விண்வெளி வீரர்களைக் கண்டு அவர்களுடன் புகைப்படம் எடுப்பதிலும் அலாதி பிரியம் காட்டிவந்துள்ளான்.

இறந்துபோன மகன்
இந்த நிலையில், கடந்த மே மாதம் 18-ந் தேதி, 11 வயதான மேத்யூ துரதிர்ஷ்டவசமாக இறந்து போயுள்ளான். பேரிடி போல வந்த செய்தியைக் கேட்டு துடிதுடித்து போயினர் மேத்யூவின் பெற்றோர்களான கோரி மற்றும் ஸ்காட் கல்லாகர். மகனின் கனவும் இப்படி தகர்ந்து போய்விட்டதே என்று சோகம் அடைந்த பெற்றோருக்கு, ஒரு யோசனை தோன்றியிருக்கிறது.

நினைவு விண்வெளி விமானங்கள்
மகன் இறந்தாலும் அவனது அஸ்தியை எப்படியாவது விண்வெளிக்கு அனுப்பிவிட வேண்டும் என நினைத்துள்ளனர். மகனின் கனவை நிறைவேற்றுவதாக இது இருக்கும் என்று எண்ணி இதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர். அப்போது தான் இறந்தவர்களின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பும் நிறுவனமான "செலஸ்டிஸ் நினைவு விண்வெளி விமானங்கள்" என்ற நிறுவனம் குறித்து கேள்வி பட்டு இருக்கின்றனர்.

மகனின் அஸ்தியை விண்ணுக்கு அனுப்ப
இதை உடனடியாக அறிந்த மேத்யூவின் பெற்றோர் இந்த நிறுவனத்தின் உதவியால் தனது மகனின் அஸ்தியை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டில் இறந்தவர்களின் அஸ்தியை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் தங்கள் மகனின் அஸ்தியை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

14 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்
இதற்காக தற்போது அவர்கள் நிதி திரட்டும் பணியில் இறங்கியுள்ளனர். 14 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இதற்காக தேவைப்படும் எனவும் 11 ஆயிரம் டாலர் திரட்டிவிட்டோம் என்றனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications