வீட்டை விட்டு ஓடி போன பாம்பு.. கண்டுபிடித்து தர கோரி புகார்.. வலைவீசி தேடும் போலீஸ்!
வாஷிங்டன்: வீட்டில் வளர்ந்து வந்த பாம்பு ஒன்று திடீரென வீட்டை விட்டு தப்பி ஓடியதால் வீட்டின் உரிமையாளர் பாம்பை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தற்போது போலீசாரும் தப்பி ஓடிய அந்த பாம்பை வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்பெல்லாம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு செய்தித்தாள்களில் வெளியாகும். தற்போது சமூக வலைத்தளங்களிலும் கூட வெளியாகின்றன.
போலீசாருக்கு புகார் அளிக்கும் பட்சத்தில் போலீசாரும் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் காணாமல் போன பொருட்கள் அல்லது நபர்களின் விவரங்களை வெளியிடுவதை நாம் பார்த்திருக்கலாம்.

நாய், பூனைகள் காணாமல் போனதா..
ஏன் சில சமயங்களில் ஆடு, மாடு காணாமல் போனதாக கூட இப்படி விளம்பரங்கள் வெளியாகி இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் செல்லப்பிராணிகள் கூட காணாமல் போய்விட்டதாக சிலர் கண்ணீர் விட்டு விளம்பரங்கள் வெளியிட்டு இருப்பதாக கேள்வி பட்டு இருக்கிறோம். நாய், பூனை காணாமல் போய் விட்டதாகவும் அவற்றை மீட்டு கொடுப்பவருக்கு சன்மானம் கொடுப்பதாகவும் அவ்வப்போது வெளியாகும் விளம்பரங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி இருக்கின்றன.

பாம்பை கண்டுபிடித்து தர கோரி போலீசில் புகார்
ஆனால் கனடாவில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பாம்பு தப்பி ஓடிவிட்டதாக காவல் நிலையத்திற்கு புகார் சென்று இருக்கிறது. ஆம்.. நீங்கள் படிப்பது சரிதான்.. பாம்பை காணோம் என்று புகார் போயிருப்பது மட்டுமல்ல.. பாம்பை வலை வீசி தேடி வருகிறதாம் அங்குள்ள காவல்துறை.. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஓக் பே என்ற பகுதியில்தான் இந்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

வீட்டை விட்டு தப்பி ஓடிய பாம்பு
ஓக் பே பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டில் பாம்பை வளர்த்து வந்திருக்கிறார். அதிக குளிரை தாங்காத ball python- வகை பாம்பு , அதற்கென பிரத்யேக கண்ணாடி கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு இருந்து இருக்கிறது. 3 அடி நீளம் உள்ள இந்த பாம்பு மலைப்பாம்பு வகையை சேர்ந்தது ஆகும். ஆப்பிரிக்க நாடுகளின் வனப்பகுதியில் இந்த வகை பாம்புகள் அதிகம் காணப்படும் என்று சொல்லப்படுகிறது.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
அதிக குளிரை தாங்கிக்கொள்ளாத இந்த பாம்பு எப்படியோ வளர்க்கப்பட்டு வந்த கண்ணாடி கூண்டிற்குள் இருந்து நழுவி தப்பி ஓடிவிட்டதாம். இதை கவனித்த பாம்பை வளர்த்து வந்தவர் அதிர்ச்சி அடைந்து வீடு முழுக்க தேடியிருக்கிறார். எங்கும் கண்டுபிடிக்க முடியாததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசாரும் விரைந்து வந்து பக்கத்து வீடுகள் அருகில் உள்ள புதர்கள் என அனைத்து இடங்களிலும் தேடி தேடி சளைத்து விட்டனர்.

பாம்பின் அங்க அடையாளங்கள்
ஆனால், பாம்பை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பாம்பு பற்றிய விவரங்களை போலீசார் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த பாம்பு சுமார் 3 பவுண்டுகள் (1.36 கி,கி) எடை கொண்டது என்று தெரிவித்துள்ளனர். விஷத்தன்மை இல்லாத இந்த பாம்பு சமீபத்தில்தான் உணவு உட்கொண்டதாகவும் அதற்கு கூர்மையான பற்கள் எதுவும் கிடையாது என்றும் போலீசார் பதிவில் தெரிவித்துள்ளனர்.

வலைவீசி தான் பிடிப்பார்கள் போல..
வழக்கமாக போலீசார் குற்றவாளிகளை தேடும் போது வலை வீசி தேடுவதாக சொல்லப்படுவது உண்டு. இப்போது உண்மையிலேயே வலை வீசித்தான் இந்த பாம்பை போலீசார் கண்டு பிடிக்க வேண்டியிருக்கும் போல் தெரிகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications