சட்டென பறந்த தங்கம் விலை.. அமெரிக்கா ஷட் டவுன் முடிவுக்கு வந்தவுடன் நடந்த மாற்றம்.. என்ன காரணம்?
வாஷிங்டன்: அமெரிக்க பெடரல் அரசு கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 43 நாட்கள் ஷட் டவுன் நிலையில் இருந்தது. அமெரிக்க வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய ஷட் டவுனாக பார்க்கப்பட்டது. இதற்கிடையே இந்த நீண்ட ஷட் டவுன் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான மசோதா அங்குள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிபர் டிரம்ப்பும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
அமெரிக்காவில் செலவினங்கள் தொடர்பான மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால் கடந்த அக்டோபர் 1ல் அமெரிக்க பெடரல் அரசு முடங்கியது. அமெரிக்க பெடரல் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். சில ஆயிரம் பேர் தங்கள் வேலைகளையும் கூட இழந்தனர். அத்தியாவசிய ஊழியர்களாகக் கருதப்பட்டவர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் சூழலும் ஏற்பட்டது.

அமெரிக்க ஷட் டவுன்
முதலில் ஓரிரு நாட்களிலேயே இந்த ஷட் டவுன் முடியும் என அமெரிக்க மக்கள் நினைத்தனர். இருப்பினும், அது நீண்டு கொண்டதே போனது. அமெரிக்க அரசு நேற்று வரை மொத்தம் 43 நாட்கள் ஷட் டவுன் நிலையில் இருந்தது. இதனால் அமெரிக்கர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சூழலில், ஒரு வழியாக இப்போது இந்த ஷட் டவுன் முடிவுக்கு வருகிறது.
முடிவுக்கு வந்தது
கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற 60 பேர் ஆதரவு தேவை. ஆனால், குடியரசு கட்சியிடம் 53 எம்பிக்கள் மட்டுமே இருந்தன. தீவிர முயற்சிக்குப் பிறகு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள், குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக மாற்றி வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் செலவின மசோதாவை நிறைவேற்றத் தேவையான 60 வாக்குகள் டிரம்ப் கட்சிக்குக் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து அந்த மசோதா பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டது. அங்கு 50% வாக்குகளைப் பெற்றால் போதும் என்பதால் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை ஈஸியாகவே கிடைத்தது. ஷட் டவுனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 222 எம்பிக்களும், எதிராக 209 எம்பிக்களும் ஆதரவளித்தனர். இதன் மூலம் பிரதிநிதிகள் சபையிலும் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டது.
டிரம்ப் திட்டவட்டம்
ஷட் டவுனை முடிவுக்குக் கொண்டு வரும் மசோதாவில் கையெழுத்திட்டுப் பேசிய டிரம்ப், "எங்களை யாராலும் மிரட்டி அடி பணிய வைக்க முடியாது என்ற தெளிவான செய்தியை அனுப்புகிறோம். அமெரிக்க மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றை மட்டும்தான்.. இந்த ஷட் டவுனுக்கு காரணம் ஜனநாயகக் கட்சியினர் தான்.. அடுத்தாண்டு மிட் டேர்ம் தேர்தல் வரும்போது அவர்கள் நமது நாட்டிற்கு என்ன செய்தார்கள் என்பதை மறக்காதீர்கள்" என்று கூறினார்.
சமரசம் என்ன
குறைந்த வருமானம் கொண்டவர்களின் இன்சூரன்ஸ்களுக்கு வழங்கப்படும் மானியம் இந்தாண்டு டிசம்பர் மாதத்தோடு முடியும் நிலையில், அதை நீட்டிக்க வேண்டும் என்பதே ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை. அந்த சலுகை நிறுத்தப்பட்டால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்லியே ஷட் டவுனை ஆரம்பித்தது. இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே சமரச முடிவு எட்டப்பட்டது.
அதாவது இப்போது செலவினங்கள் தொடர்பான மசோதா மற்றும் நிறைவேற்றப்படும் என்றும் டிசம்பர் மாதம் இன்சூரன்ஸ் சலுகையை நீட்டிப்பது தொடர்பாகத் தனி வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் குடியரசு கட்சியினர் உறுதியளித்தனர். அதை ஏற்றுக் கொண்ட 8 ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் செலவின மசோதாவுக்கு ஆதரவளித்தனர்.
தங்கம் விலை
அமெரிக்க ஷட் டவுன் முடிவுக்கு வருவதாகத் தகவல் வெளியான உடனேயே மறுபுறம் தங்கம் விலை சட்டென அதிகரித்தது. இதற்குப் பிரதானக் காரணமே ஷட் டவுன் முடிவுக்கு வந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த டேட்டாக்கள் வரிசையாக வெளியாக ஆரம்பிக்கும். அது வந்தால் அடுத்த மாதம் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி குறைப்பு வெளியிடும் வாய்ப்பு பிரகாசமாகும். அப்படி வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை உயரும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications