கண்ணால் காண்பது பொய்.. ஃபேக் ஐடிக்களிடம் மொத்தமாக பணத்தை இழக்க போகும் மக்கள்.. வீடியோ பாருங்க
வாஷிங்டன்: ரியல் டைம் வீடியோவை ஏ.ஐ மூலம் மாற்றி இருக்கிறார்கள்.. இன்னும் சில நாளில் பெண் பேசுவது போல பேசி ஏஐயை வைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நடைபெற போகிறது.. அதனால் கண்ணால் காண்பது அத்தனையும் பொய் என்று உணராவிட்டால் பல ஃபேக் ஐடிக்களிடம் ஏமாந்து பணத்தை மக்கள் பறிகொடுக்க வேண்டியதிருக்கும்.
டேட்டா அறிவியல் : உலகத்தை ஆண்டது மனிதன் என்பது போய் மிஷின் தான் உலகத்தை ஆளப் போகிறது. நாம் என்ன பேச வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பது வரை மாறி வருகிறது.. எல்லாவற்றிற்கும் ஏஐ தான் காரணம். டேட்டா அறிவியல் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இது நாம் மொபைலில் தேடும் அத்தனையையும் தெரிந்து வைத்து நமக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற விளம்பரங்களை நமக்கு அனுப்பி வருகிறது.. அதேபோல் தான் யூடியூப் மற்றும் பேஸ்புக் வீடியோக்களும் வருகின்றன. இது ஒரு பெரிய பிரச்சனை..

ஏஐ வேலைவாய்ப்பு: இரண்டாவது விஷயம்.. நம்முடைய வேலைகள் பலவற்றை ஏஐக்கள் செய்கின்றன.. சமையலுக்கு உதவுவது போல், மருத்துவத்திற்கு உதவுவது வரை பல வேலைகளை ஏஐ அறிவுள்ள ரோபோக்கள் செய்கின்றன. முடிவெட்டுவது, பாத்திரம் கழுவ, கொரியர் டெலிவரி செய்ய, சாப்பாடு பரிமாற, வீட்டு வேலைகள் செய்ய, ஹோட்டலில் வேலை செய்ய, ஆசிரியராக வேலை செய்ய,மொபைல் ஆப்களை உருவாக்க, டேட்டா சைன்ஸ்களில் தகவல்களை திரட்ட, செய்தி வாசிக்க, செய்திகள் எழுத, மளிகை பொருட்கள் வாங்க, ஓட்டலில் உணவுப் பொருட்கள் வாங்க, சூப்பர் மார்க்கெட்டில் பர்ச்சேஸ் செய்ய என எல்லாமே ஏஐ செய்ய போகிறது. ஏன் போரில் சண்டை போடவும் ஏஐக்கள் பயன்படுத்தப்பட போகின்றன. ஏஐக்கள் தான் நம்முடைய வேலைகளை செய்ய போகின்றன என்பது கசப்பான உண்மை.
ரியல் டைம் வீடியோ: மூன்றாவது விஷயம் தான் மற்ற இரண்டையும் விட மிக மோசமான விஷயம்.. கண்ணால் காண்பதும் பொய் என்று விரைவில் உறுதி படுத்த போகிறது இந்த செயற்கை நுண்ணறிவு. ரியல் டைம் வீடியோவை ஏ.ஐ மூலம் மாற்ற முடிகிறது. அதாவது ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் மாதிரியே தோற்றத்தில் ஒருவரை ரியல் டைமில் நம் முன் காட்டுவார்கள். ஒரு மனிதன் பின்னாடி இருந்து என்ன செய்கிறாரோ அதை அப்படியே அந்த ரோபோ செய்யும். இது கற்பனைக்காக அன்று செய்யப்பட்டது.
கண்ணால் காண்பதும் பொய் என்று விரைவில் உறுதி படுத்த போகிறது செயற்கை நுண்ணறிவு.
— Senthazal Ravi 🇸🇪 (@senthazalravi) October 19, 2023
ரியல் டைம் வீடியோவை ஏ.ஐ மூலம் மாற்றி இருக்கிறார். இன்னும் சில நாளில் இது மார்க்கெட்டுக்கு வரும் போது பல பேர் பணத்தை Fake ஐ.டிகளிடம் இழக்க போவது உறுதி.
pic.twitter.com/wY70ZutthS
உண்மையில் அது ரியலாகவே நடக்க போகிறது. நீங்கள் அப்போது என்ன செய்கிறீர்களோ அதை அப்படியே செய்யும், பேசும், எல்லாவற்றையும் ஏஐ செய்யும். அதுவும் நீங்கள் விரும்பும் உருவத்தில் உள்ள ஏஐ செய்ய போகிறது. இன்னும் சில நாளில் இது மார்க்கெட்டுக்கு வருப்போகிறது. அப்படி வரும் போது பல பேர் பணத்தை Fake ஐ.டிகளிடம் இழக்க போவது உறுதி என்று ஏஐ நிபுணர்களே.. சாப்ட்வேர் வல்லுநர்களே இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்த போகும் விளைவுகளை விளக்கி வருகிறார்கள்.
எனவே கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை காலங்கள் தான் மக்களுக்கு உணர்த்த போகிறது. வரும் கால சந்ததிகள், எந்திரன்களுடன் மல்லுக்கட்டப்போவது உறுதியாக உள்ளது. மனிதனுக்கு நிகரான சிந்திக்கும் திறன்களை ரோபோக்களுக்கு விஞ்ஞானிகள் கொடுத்து வருவதால், அதனால் ஏற்பட போகும் விளைவுகள் கற்பனைக்கும் எட்டாததாகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications