காசா அமைதி ஒப்பந்தம்.. டிரம்ப் பேசும் போது திடீரென எழுந்த கோஷம்.. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பரபரப்பு
ஜெருசலேம்: காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாராட்டும் வகையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்று பேசினார். டிரம்ப் பேசும் போது திடீரென கோஷம் எழுப்பப்பட்டது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் மூண்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த போரால் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர். காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் வாழ்வாதாரத்தை இழந்து கடும் இன்னல்களை சந்தித்தனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டார். அதன்படி அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தல் பத்தா அல்-சிசி ஆகியோரின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேலில் டிரம்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, "வானம் அமைதியாக உள்ளது. துப்பாக்கி குண்டுச் சத்தங்கள் ஓய்ந்துவிட்டன. வரலாற்று சிறப்பு மிக்க விடியல் வரப்போகிறது" என்றார்.
டிரம்ப் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த போது, அவருக்கு எழுந்து நின்று எம்பிக்கள் வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே, டிரம்பிற்கு எதிராக இடதுசாரி எம்பி போராட்டத்தில் ஈடுபட்டார். இஸ்ரேல் எம்பி ஒஃபேர் காஸ்சிப் மற்றும் அய்மன் ஒடே ஆகியோர் "இனப்படுகொலை" என கோஷம் போட்டனர். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
அப்போது டிரம்ப், "மிகவும் திறமை வாய்ந்த நபர்" என்று கூறியதும் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. அதேபோல் "பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும்" என்ற போஸ்டர்களையும் இடதுசாரி எம்பி ஒருவர் காட்டினார். இதனால் டிரம்ப் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications