15 ஆண்டுகளாக ஒரே பிரேக் பாஸ்ட்! கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பகிர்ந்த உணவு ரகசியம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கடந்த 15 ஆண்டுகளாக தனது காலை உணவாக ஒரே மாதிரியான உணவைத்தான் சாப்பிட்டு வருகிறார். இதற்கு பின்னால் முக்கியமான காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சுந்தர் பிச்சையின் காலை உணவு, முட்டை, டோஸ்ட் மற்றும் ஒரு கப் டீ இதுதான். தினமும் காலையில் என்ன சாப்பிடலாம் என்று யோசித்து நேரத்தை வீணடிக்காமல் அன்றைய நாளின் முக்கிய வேலைகளில் உடனடியாக கவனம் செலுத்தவே இந்த எளிய வழக்கத்தை அவர் கடைப்பிடித்து வருகிறார்.

Sundar Pichai

வழக்கமாக படைப்பாளிகள் இதுபோன்ற எளிய பழக்க வழக்கத்தை பின்பற்றுவதுண்டு. காரணம் அவர்களின் சிந்திக்கும் திறன், டைவர்ட் ஆகிவிடக்கூடாது என்பதுதான். இவர்கள் தினமும் ஒரே மாதிரியான சட்டை பேண்ட், ஒரே மாதிரியான உணவு, ஒரே மாதிரியான கார், பைக், ஒரே மாதிரியான மொபைல் என எல்லாவற்றிலும் எளிமையை காட்டுவார்கள்.

வெளியிலிருந்து பார்ப்பதற்கு இந்த சின்ன மாற்றம் என்ன செய்துவிடப்போகிறது? என்று கேள்வி எழலாம். ஆனால், உளவியல் ரீதியாக இந்த சின்ன சின்ன மாற்றம் கூட.. அன்றாட வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அன்றைய நாளின் தொடக்கத்தில் என்ன சட்டை போடுவது என்று நீங்கள் யோசிக்க தொடங்கினால்.. அன்றைய தினம் முழுவதும் பல விஷயங்களில் ஆப்ஷனை செலக்ட் செய்வதில் நேரத்தை வீணடிப்பீர்கள். எனவேதான் ஒரே மாதிரி எல்லாவற்றையும் செய்கிறார்கள். சுந்தர் பிச்சையும் இதுபோன்று சாதாரணமான பழக்கத்தையே பின்பற்றுகிறார்.

அதேபோல, இவர் காலையில் எழுந்தவுடன் வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல் படிக்கும் பழக்கம் கொண்டவர். இதன் மூலம் உலக நடப்புகளை தெரிந்துக்கொள்கிறார். மட்டுமல்லாது இவர் வெளியூர்களுக்கு செல்லும்போது, அந்த ஊர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக பெங்களூர் போகும்போது தோசையும், டெல்லி போகும்போது சோலே பட்டூரே, மும்பையில் பாவ் பாஜியை விரும்பி சாப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது.

வேலை பொறுத்தவரை, சுந்தர் பிச்சை இரவு நேரங்களில் தீவிரமாக வேலை செய்யும் வழக்கத்தை கொண்டவர். இரவு 9 மணிக்கு மேல் சுறுசுறுப்படையும் இவர், இரவு 10 மணிக்கு மேல்தான் மிகச் சிறப்பான உழைப்பை வழங்க முடிகிறது என்று கூறுகிறார். தினசரி 6.5-7 மணி நேரம் வரை தூங்குகிறார். உடற்பயிற்சியை பொறுத்தவரை, வார நாட்களில் நேரம் கிடைக்கும்போதும், வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் கட்டாயமாகவும், வார இறுதி நாட்களில் முழுமையாகவும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+