Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடகைத்தாய் முறை: "மருமகளுக்காக பேரக்குழந்தை பெற்று கொடுத்த 56 வயது மாமியார்".. நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் கர்ப்பபை அகற்றப்பட்ட மருமகளுக்கு வாடகைத்தாய் முறையில் மாமியார் ஒருவர் குழந்தை பெற்று கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஞ்ஞானம் அனைத்து துறைகளிலும் முன்னேறிவிட்டது. இதற்கு மருத்துவ துறையும் விதிவிலக்கல்ல.

அறுவை சிகிச்சை தொடங்கி உறுப்பு மாற்று சிகிச்சை வரை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு சாதனைகளை மத்துவ விஞ்ஞானிகள் நிகழ்த்தி காட்டியிருக்கின்றனர்.

செயற்கை கருத்தரிப்பு முறை

செயற்கை கருத்தரிப்பு முறை

மருத்துவ துறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய சிகிச்சை முறைகள் உலகம் முழுவதும் எண்ணில் அடங்காத உயிர்களை காப்பாற்றி வருகின்றன. அந்த வகையில், குழந்தைப் பேறு இல்லாதவர்களின் ஏக்கத்தை போக்குவதற்காகவும் செயற்கை கருத்தரிப்பு முறை, வாடகைத்தாய் முறை என தற்போது பல்வேறு நவீன முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைக்காக ஏங்கும் தம்பதிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இந்த இருமுறைகளும் உள்ளன.

தனிச்சட்ட விதிமுறைகள்

தனிச்சட்ட விதிமுறைகள்

ஒரு பெண் குழந்தை பெற முடியாத நிலை ஏற்பட்டால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. வாடகைத்தாய் முறைக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையான சட்ட திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவிலும் வாடகைத்தாய் முறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது. இந்தியாவில் இதற்கென தனிச்சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

பெரும் வரப்பிரசாதமாக..

பெரும் வரப்பிரசாதமாக..

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ள வாடகைத் தாய் முறையை பின்பற்றி அமெரிக்காவில் மருமகளின் கருவை சுமந்து மாமியார் குழந்தை பெற்று கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விவரம் வருமாறு:- அமெரிக்காவின் உடா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஜெப் ஹாக்- கேம்ப்ரியா.

பேரப்பிள்ளையை பெற்றெடுக்க

பேரப்பிள்ளையை பெற்றெடுக்க

இதில் கேம்ப்ரியாவுக்கு மருத்துவ காரணங்களால் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. இதனால், அப்பெண்ணால் குழந்தைப் பேறு அடைய முடியாத நிலை இருந்தது. இந்தசூழலை உணர்ந்த அந்தப்பெண்ணின் மாமியார் அதாவது பெண்ணின் கணவரின் தாயான நான்சி ஹாக் (56 வயது) என்பவர் வாடகைத்தாயாக இருந்து தனது பேரப்பிள்ளையை பெற்றெடுக்க சம்மதம் தெரிவித்தார்.

5-வது குழந்தை

5-வது குழந்தை

இதன்படி, வாடகைத்தாயாக இருந்து தனது மகன் மற்றும் மருமகளுக்காக அழகான பெண் குழந்தையை பெற்று கொடுத்து இருக்கிறார். ஜெப் ஹாக் தம்பதிக்கு இது 5-வது குழந்தையாகும். தனது மாமியார் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தது குறித்து உருக்கமாக கேம்பரியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்று கொடுத்த தாயாரை பெருமைபடுத்தும் விதமாக தனது மகளுக்கு ஹன்னா என்று பெயர் சூட்டியிருப்பதாக ஜெப் ஹாக் தெரிவித்து இருக்கிறார்.

ஆரோக்கிய உடல் நிலையை சார்ந்தது

ஆரோக்கிய உடல் நிலையை சார்ந்தது

இது குறித்து வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள உதவி செய்த மருத்துவர் டாக்டர் ரஸ்சல் பவுல்க் கூறியதாவது:- "தனது பேரக்குழந்தையை ஒருவர் பெற்று எடுப்பது என்பது வழக்கத்திற்கு மாறானது தான். வயது உண்மையில் ஒரு கட்டுப்படுத்தும் காரணியாக இல்லை. உண்மையில் இது தனி நபர் ஒருவரின் ஆரோக்கிய உடல் நிலையை சார்ந்தது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+